யாழ். மருத்துவபீட ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் சற்று முன்னதாக மேலும் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். மருத்துவபீட ஆய்வு கூடத்தில் 247 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் இவ்வாறு இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட இருவரும் வவுனியா நகரப்பகுதி வர்த்தகர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.