யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப் பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிக்கப்பட்டு அழிக்கப்பட்டாமைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்ருவதற்கு இன்று பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் விசேட அமர்வு தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தலைமையில் காலை 10 மணிக்கு சபையின் சபா மண்டபத்தில் ஆரம்பமானது
இதன்போது தவிசாளரால் குறித்த தீர்மானத்தை சபையில் சமர்ப்பிக்கும் போது அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடனும் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தவிசாளர் எமது இனத்தின் உரிமைகள் அழிக்கபடும் போது நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஓரணியில் நின்று குரல் கொடுப்போம் என்றதுடன் குறித்த தீர்மானம் உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்படும் என்றார்