January 16, 2021, 6:21 am

முள்ளிவாய்க்கால் தூபி இடிப்பில் சுரேன் ராகவனிற்கும் நேரடி தொடர்பு: பரபரப்பு தகவலை வெளியிட்ட வன்னி மாவட்ட தமிழ் எம்.பி!

தமிழர்கள் தனித்தவமாக தமது அடையாளங்களுடன் இலங்கையில் வாழ முடியாது என்பதற்கு மிகப்பெரிய ஒரு உதாரணமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் உடைக்கப்பட்ட சம்பவம் அமைந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

இவர் இன்று ஞாயிற்றுக்கிழமை(10) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் அரசாங்கத்தின் கட்டளைக்கு அமைவாக இராணுவத்தின் உதவியுடன் பல்கலைக்கழக துணைவேந்தரின் ஆலோசனைக்கு அமைவாக வெள்ளிக்கிழமை இரவு இடிக்கப்பட்டுள்ளது.

அரச திணைக்கலமாக இருக்கலாம், அரச நிறுவனங்களின் பணிப்பாளர்களாக இருக்கலாம், இவர்கள் எல்லாம் அரசாங்கத்தின் ஒரு ஏஜண்டுகலாக இருக்கின்றனர்.

வெள்ளிக்கிழமை இரவு இடம் பெற்ற நிகழ்வு என்பது ஒட்டு மொத்த தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய நிகழ்வாக இதனை நாங்கள் பார்க்கின்றோம்.

தமிழர்கள் தனித்துவமாக தமது அடையாளங்களுடன் இலங்கையில் வாழ முடியாது என்பதற்கு மிகப்பெரிய ஒரு உதாரணமாக குறித்த சம்பவத்தை பார்க்க முடியும்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது இலங்கையில் தமிழர்கள் மிகக் கொடூரமான முறையில் இனப் படுகொலையால் 2009 ஆம் ஆண்டு இடம் பெற்ற யுத்தத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள், பொது மக்கள் ஆகியோரை நினைவு கூறுவதற்கான ஒரு நினைவிடத்தையே இலங்கை அரசு இடித்துள்ளது.

உண்மையில் இதன் பின்னணியில் பல்வேறு விடையங்கள் உள்ளதாக நான் சந்தேகப்படுகின்றேன். என்னிடம் சிலர் ஆலோசனைகளையும் வழங்கி உள்ளனர்.

குறிப்பாக முன்னாள் வடக்கு ஆளுனரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன், முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஒட்டோவா சட்ட சபையில் ஒரு சட்டமாக முன் மொழிவதற்கு விஜய் தணியாசலம் என்பவர் முன் மொழிந்துள்ளார். அதனை நிறை வேற்றக்கூடாது என்ற கருத்தை பாராளுமன்றத்தில் முன் வைத்தார்.

என்னைப் பொறுத்த வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவிடம் உடைக்கப் பட்டமைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் பேசியதற்கும் இடையில் நேரடி தொடர்புகள் உள்ளதாகவே நான் கருதுகின்றேன்.

அவர் பேசிய ஒரு வார காலத்தினுள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் உடைக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனையைக் கண்டு பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்கு மேற்கொள்ளும் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனையைக் கண்டு பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பொதுமக்களில் சிலர் கொரோனா சோதனை செயல்முறைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற...

தரம் ஆறுக்கு மாணவர்களை இணைப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியாகியது!

கடந்த ஆண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தரம் ஆறு கற்பதற்காக முன்னணிப் பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.கடந்த ஒக்டோபர் 11 ஆம் திகதி இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சைகள் 2,936...

கூட்டமைப்பில் இருந்து விலகும் டெலோ – செல்வம் அடைக்கலநாதன் கூறிய கருத்து

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து டெலோ வெளியேறவுள்ளதாக வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானது என அறிய முடிகின்றது.தமிழரசுக் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளோடு ஜெனீவா விவகாரம் தொடர்பாகக் கலந்துரையாடாமல் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாகவே...

Stay Connected

6,167FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

திருகோணமலை பிரதேச சபையின் அதிகாரத்தை இழந்த கூட்டமைப்பு

கடந்த 25 வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த திருகோணமலை பிரதேச சபையின் அதிகாரத்தை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கைப்பற்றியுள்ளது.திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டு இருந்த...

ஆண்டு ஆறுக்கு மாணவர்களை இணைப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியாகியது!