January 18, 2021, 5:34 pm

முல்லைத்தீவில் பொலிஸாரின் அடாவடி! மக்கள் அந்தரிப்பு

முல்லைத்தீவில் வசிப்பதற்குக் காணி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களால் வைக்கப்பட்ட தமது கோரிக்கை அடங்கிய, துன்ப நிலையை வெளிப்படுத்தும் பதாதைகளைப் பிடுங்கி எறிந்து பொலிஸார் அட்டகாசம் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்களால் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலர் பிரிவின் வேணாவில் கிராமத்தில் காணி கோரி வீதிக்கு வந்த மக்கள் கொட்டில்கள் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 16 பேர் தமக்கு உறவினர்களின் காணிகளில் தொடர்ந்தும் வாழ வழியின்றி தமக்கான காணிகள் வழங்க கோரி வீதிக்கு வந்து வீதியோரத்தில் அரச காணி ஒன்றில் 16 பேரும் தனித்தனி கொட்டில்களை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தமக்கான வாழ்விட காணிகளை வழங்குமாறு கோரி புதுக்குடியிருப்பு பிரதேச காணிக்கிளை பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலரிடம் தமது கோரிக்கைகளை முன் வைத்தும் எந்தவிதமான தீர்வுகளும் கிடைக்காத நிலையில் தமது கிராமத்தில் உள்ள அரச காணி ஒன்றில் வீதியோரத்தில் கொட்டில்களை அமைத்து காணி கோரி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

சிறிய குழந்தைகளுடன் வீதிக்கு வந்த இவர்கள் பல்வேறு துன்பங்களை சந்தித்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு வருகை தந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த குடும்பங்களை போராட்டம் செய்ய முடியாது என கொரோனாவை காரணம் காட்டி குறித்த இடத்தை விட்டு செல்லுமாறும் வரும் திங்கள்கிழமை பிரதேச செயலகத்துக்கு தங்களை அழைத்து சென்று பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி தீர்வை பெற்றுத்தருவதாகவும் இவர்களை கலைந்து செல்லுமாறும் கோரினர்.

இருப்பினும் குறித்த மக்கள் பிரதேச செயலாளர் வருகை தந்து தமக்கான உத்தரவாதம் வழங்க வேண்டுமென தொடர்ந்தும் போராடி வந்தனர். இந்நிலையில் உறவுகள் தமது போராட்டத்தை அடையாளப்படுத்தும் முகமாக குறித்த இடத்தில் பதாகை ஒன்றை காட்சிப்படுத்தினர்.

இதன் பின்னர் உறவுகள் தமக்கான மத்திய உணவை தயாரித்து வைத்திருந்த நிலையில் மூளவும் குறித்த இடத்துக்கு வந்த புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்கள் மக்கள் கட்டியிருந்த பதாகையை பிடுங்கி எறிந்து கொரோனாவை காரணம் காட்டி மக்களை அச்சுறுத்தியதோடு நீதிமன்றில் வழக்கு தொடர்வதாகவும் மிரட்டி குறித்த இடத்தில் வருகை தந்திருந்த கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகளையும் பொலிஸ் நிலையம் வருகை தந்து வாக்குமூலம் தருமாறு குறித்த இடத்தில் இருந்த இளைஞர்கள் சிலரை கைது செய்வதாகவும் மிரட்டினர்.

இதன்போது குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்ற இடங்களில் கொரோனா தொடர்பில் கண்டு கொள்ளாத பொலிசாருக்கு எமது போராட்ட இடத்தில் மட்டுமா கொரோனா வரும் எனவும், காணி வீடு இல்லாமல் இருப்பதை விட இதிலேயே கொரோனா வந்து சாகிறோம் என பொலிஸாருக்கு தெரிவித்தனர்.

நிலைமைகளை பிரதேச செயலாளருக்கு தெரிவித்ததன் அடிப்படையில் அவர் சம்பவ இடத்துக்கு வருகை தருவதாக உறுதியளித்துள்ளார். இந்நிலையில் உறவுகள் வீதியோரத்தில் இருந்து உணவருந்துவதோடு தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

Related Articles

திடீரென மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தினால் நுவரெலியாவில் தொடர்ந்தும் பதற்றம்!- விசேட அதிரடிபடையினர் குவிப்பு

நுவரெலியா- கந்தப்பளை, பார்க் தோட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முதல் தொடர்ச்சியாக அமைதியின்மை நிலவி வருகின்றது.பார்க் தோட்ட முகாமையாளர் பெருந்தோட்டத் தொழிலாளர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனையும் தகாத வார்த்தைகளினால் பேசிய சம்பவத்தை...

பாதுகாப்புக்கு மத்தியில் அமெரிக்காவில் ஆங்காங்கே ஒன்றுகூடும் எதிர்ப்பாளர்களால் கடும் பரபரப்பு!

அமெரிக்க ஜனாதிபதியாக நாளை மறுத்தினம் புதன்கிழமை ஜோ பைடன் பதவியேற்கவுள்ள நிலையில் மாகாண அரசு தலைமையகங்கள் முன்பாக ஆயுதம் ஏந்திய சிலர் உட்பட சிறிய அளவிலான எதிர்ப்பாளர்கள் கூடி வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.வொஷிங்டனில்...

கனடாவில் சடுதியாக அதிகரிக்கும் உயிரிழப்பு; மொத்த கொரோனா பலி 18,000 –ஆக உயர்வு!

கனடாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட 149 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த நிலையில் நாட்டில் பதிவானமொத்த கொரோனா மரணங்கள் 18 ஆயிரத்தைக் கடந்துள்ளன.ஞாயிற்றுக்கிழமை கனடா முழுவதும் 6,433 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்...

Stay Connected

6,241FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

காணி சுவீகரிப்பதற்காக பொலிஸாரை வரவழைத்துள்ளமையால் மண்டைதீவில் பதற்ற நிலை

விருந்தினர் விடுதி ஒன்று அமைப்பதற்காக மக்களின் காணி சுவீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தினர் பொலிஸாரை வரவழைத்துள்ளமையால் மண்டைதீவில் பதற்ற நிலை ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.முன்னதாக ஒன்று திரண்ட மக்கள்...

யாழில் பொதுச் சந்தைகள் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்படுகின்றன !

டந்த மாதம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா அதிகரித்ததன் காரணமாக யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது சந்தைகளும் சுகாதார பிரிவினரால் மூடப்பட்டிருந்த நிலையில் வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் வழிகாட்டுதலுக்கிணங்க இன்றைய தினம்...