January 25, 2021, 2:26 pm

மும்பை இந்தியன்ஸ் வெறித்தனம்… டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது..

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி முதல் அணியாக ஐ.பி.எல் 2020 இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.

ஐ.பி.எல் 2020 தொடரின் ப்ளே ஆஃப் குவாலிஃபையர் சுற்றில் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டள்ஸ் அணிகள் மோதின. துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, டீ-காக் களமிறங்கினார்கள். ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் அஸ்வின் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். ரோஹித் சர்மா விக்கெட் ஆரம்பத்திலேயே விழுந்தாலும் மும்பை சுதாரித்து கொண்டு விளையாடியது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியிலும் பொறுப்புடன் விளையாடினார்.

டீ-காக் 40 ரன்னிலும் சூர்யகுமார் யாதவ் 51 ரன்னிலும் அவுட்டாகினர். சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தாலும் மும்பை தனது ரன்ரேட்டை தக்கவைத்து கொண்டே இருந்தது. இஷான் கிஷான் 30 பந்துகளில் 55 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்கமால் இருந்தார். இறுதி ஓவர்களில் தனது வழக்கமான அதிரடியை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா 14 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 37 ரன்கள் குவித்தார். இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தவான், ப்ர்த்திவி ஷா, ரஹானே அடுத்தடுத்து டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் பிடியில் சிக்கிய டெல்லி அணி சின்னாபின்னமானது. அந்த அணியின் மார்கஸ் ஸ்டோனிஸ் மட்டும் அதிரடியாக விளையாடி 46 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பும்ரா 4 ஒவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து டெல்லி 4 விக்கெட்களை வீழ்த்தினார். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்து 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதையடுத்து ஐ.பி.எல் 2020 தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி முன்னேறி உள்ளது.

Related Articles

யாழில் விடுதலைப் புலிகளிற்கு எதிராக படைத்தரப்பின் பின்னணியில் சிலர் கோசம்:

யுத்தத்தில் இழைக்கப்பட்ட கொடுமைகளிற்கு பரிகாரம் தேடி தமிழனமே ஒரே குரலில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நீதி கேட்டுள்ள நிலையில், படைத்தரப்பின் ஏற்பாட்டில் யாழ் நகரில் இன்று  சிலர் கோசமெழுப்பினர்.போராட்டத்தில் கலந்து கொண்ட...

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை கோட்டாபயவின் ஆணைக்குழு காப்பாற்றாது! –

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை ஆராயும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தற்போது அமைத்துள்ள ஆணைக்குழு நாட்டுக்கு எந்த விதத்திலும் கைகொடுக்கப்போவதில்லை. இது வெறுமனே கண்துடைப்பு நாடகம்...

இலங்கையில் முன்னுரிமை அடிப்படையில் கொரோனாத் தடுப்பூசி! – பட்டியல் இறுதியானது! இராணுவத் தளபதி

இலங்கையில் கொரோனாத் தடுப்பூசி வழங்கும் பணிகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக கொரோனாத் தடுப்பூசி வழங்கப்படவுள்ள முன்னுரிமைப் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது எனக் கொரோனாத் தடுப்புக்கான தேசிய...

Stay Connected

6,384FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

யாழில் விடுதலைப் புலிகளிற்கு எதிராக படைத்தரப்பின் பின்னணியில் சிலர் கோசம்:

யுத்தத்தில் இழைக்கப்பட்ட கொடுமைகளிற்கு பரிகாரம் தேடி தமிழனமே ஒரே குரலில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நீதி கேட்டுள்ள நிலையில், படைத்தரப்பின் ஏற்பாட்டில் யாழ் நகரில் இன்று  சிலர் கோசமெழுப்பினர்.போராட்டத்தில் கலந்து கொண்ட...

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை கோட்டாபயவின் ஆணைக்குழு காப்பாற்றாது! –

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை ஆராயும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தற்போது அமைத்துள்ள ஆணைக்குழு நாட்டுக்கு எந்த விதத்திலும் கைகொடுக்கப்போவதில்லை. இது வெறுமனே கண்துடைப்பு நாடகம்...

இலங்கையில் முன்னுரிமை அடிப்படையில் கொரோனாத் தடுப்பூசி! – பட்டியல் இறுதியானது! இராணுவத் தளபதி

இலங்கையில் கொரோனாத் தடுப்பூசி வழங்கும் பணிகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக கொரோனாத் தடுப்பூசி வழங்கப்படவுள்ள முன்னுரிமைப் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது எனக் கொரோனாத் தடுப்புக்கான தேசிய...

ரசிகரின் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யாவுக்கு ரசிகர்கள் ஏராளம். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவ ‘அகரம்’ அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அதேபோல் அவரது ரசிகர்களும் மக்களுக்கு...

மேல் மாகாண பாடசாலைகள் இன்று முதல்

இன்று முதல் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மேல் மாகாண மாணவர்களுக்காக மட்டும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் கொரோனா வைரஸ் பரவல்...