29.8 C
Jaffna
Sunday, April 18, 2021

சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு சமுர்த்தி அபிமானி விற்பனை சந்தை இன்று கண்டாவளையில் ஆரம்பமானது

சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு சமுர்த்தி அபிமானி விற்பனை சந்தை இன்று கண்டாவளையில் ஆரம்பமானது. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களிற்கான சந்தை வாய்ப்பினை பெற்றுக்கொடுத்தல் மற்றும் மக்களிற்கு மலிவான விலையில் பொருட்களை கொள்வனவு செய்யும் வகையிலும் சமுர்த்தி அபிமானி விற்பனை சந்தை இன்று கண்டாவளையில் ஆரம்பமானது.
இன்றும் நாளையும் கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் உள்ள புளியம்பொக்கனை சந்தியில் குறித்த சந்தை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கண்டாவளை பிரதேச செயலாளரின் தலைமையில் குறித்த சந்தை இன்று திறந்து வைக்கப்பட்டது.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும், கண்டாவளை பிரதேச செயலகமும் இணைந்து குறித்த சந்தையை அமைத்துள்ளனர். இதன் மூலம் உள்ளுர் உற்பத்தியாளர்கள் தமக்கான சந்தை வாய்ப்பினை பெற்றுக்கொள்வதுடன், பொது மக்கள் சித்திரை புத்தாண்டை வரவேற்கும் வகையில் மலிவான விலையில் பொருட்களை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

பாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கம்!

பாகிஸ்தானில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ...

எந்த நேரத்திலும் அலெக்சி நவால்னி உயிரிழக்ககூடும்!

ஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வரும் அலெக்சி நவால்னி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு...

நாமலுக்கு தலைவர் பதவி… வழங்கி வைத்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் "ஊருடன் உரையாடல் - கிராமிய அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி" என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த செயலணி ஏப்ரல் 09...

Stay Connected

6,849FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

பாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கம்!

பாகிஸ்தானில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ...

எந்த நேரத்திலும் அலெக்சி நவால்னி உயிரிழக்ககூடும்!

ஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வரும் அலெக்சி நவால்னி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு...

நாமலுக்கு தலைவர் பதவி… வழங்கி வைத்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் "ஊருடன் உரையாடல் - கிராமிய அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி" என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த செயலணி ஏப்ரல் 09...

கேப்டன் பதவியை வழங்கியது ஏன்? தமிழன் தினேஷ் கார்த்திக் விளக்கம்

 தமிழக வீரரான தினேஷ் கார்த்திக், கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியை இயான் மோர்கனிடம் கொடுத்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர்,...

கோபா டெல் ரே கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றிய பார்சிலோனா

கோபா டெல் ரே இறுதிப் போட்டியில் பார்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் பில்பாவோவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. கோபா டெல் ரே வரலாற்றில் 31 முறை வெற்றிகளைப் பெற்ற பார்சிலோனா மிகவும்...