கடந்த நல்லாட்சி காலத்தில் மாகாணசபை தேர்தலை நடத்தாமல் இழுத்தடிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்தாசையாக இருந்ததை, கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் முன் செல்வதறகு பயந்து அப்போதைய அரசும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் தேர்தலை ஒத்திவைத்ததாக தெரிவித்தார்.
மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என்று ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது,
நிச்சயமாக தேர்தலை நடத்துவோம் என்று அமைச்சர் உறுதியளித்தார். ஆனால் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தேர்தலை நடத்த ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் கூறினார்.
தற்போதுள்ள தேர்தல் முறையை ஒழிப்பதன் மூலம் தேர்தலை நடத்துவது தொடர்பாக முன்னாள் அரசாங்கம் பல கூற்றுக்களை முன்வைத்தது, அதற்கான மாற்றீட்டை அறிமுகப்படுத்தவில்லை.
முந்தைய அரசாங்கத்தின் ஆட்சியில் வரலாற்றில் முதல் முறையாக,
பாராளுமன்றத்தில் ஒரு மசோதாவை முன்வைத்த ஒரு அமைச்சர் அதற்கு எதிராக வாக்களித்தார்.
மக்கள் முன் செல்ல அவர்கள் பயந்ததால் தமிழ் தேசிய கூட்டணியின் உதவியுடன் தேர்தல்களை நடத்துவதைத் தவிர்ப்பதற்காக முன்னாள் அரசாங்கம் பல்வேறு அரசியல் தந்திரங்களை பயன்படுத்தியதாக அமைச்சர் பீரிஸ் குற்றம் சாட்டினார்.