29.6 C
Jaffna
Monday, April 19, 2021

கிழக்கில் பிரமாண்ட சிங்கள குடியேற்றம் ஆதங்கத்தில் சுமந்திரன்

அரச திணைக்களமே பாதுகாக்க வேண்டிய வளங்களை அழித்து ஒரு குடியேற்றத்திட்டத்தை உருவாக்குவதற்கான முதற்படிகளை இங்கே மேற்கொள்வதாகத் தோன்றுகிறது. இதற்கெதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இதனை நாங்கள் ஆராய்ந்து சட்ட நடவடிக்கை எடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நேற்று பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கெவிலியாமடு பிரதேசத்தில் பண்ணையாளர்களின் மேய்ச்சற்தரையில் மரமுந்திரிகைச் செய்கை மேற்கொள்ளப்படுவது குறித்த களவிஜயம் மேற்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது மக்கள் தங்கள் வாழ்விடங்களில் மீள்குடியேற்றம் செய்ய முடியாமல் இருப்பதற்கு ஒரு காரணம் வனஇலாகா. மக்கள் வாழ்ந்த இடங்களையும் வனங்கள் என்று பிரகடணப்படுத்தி தற்போது எமது மக்கள் அங்கு செல்ல முடியாத ஒரு நிலைமை காணப்படுகின்றது. ஆனால் இங்கு வனப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டிய இந்த வனங்கள், அந்தச் சட்டம் அப்படியே இருக்கத்தக்கதாக அதன் அதிகாரிகள் வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் அரசாங்கத்தின் இன்னுமெரு திணைக்களத்திற்கு அதனை அழிப்பற்கான அனுமதியைக் கொடுத்திருக்கின்றார்கள். அது சட்டபூர்வமாகக் கொடுக்கப்படவில்லை. சட்டவிரோதமாக நடைபெறுகின்ற இந்த விடயத்தைக் கண்டும் காணாமல் இருக்கதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றது தெரிகின்றது.

பிரதேச செயலாளரிடம் இதனைப் பற்றிக் கேட்டால் தெரியாது என்று சொல்கின்றாராம். இவர்களிடத்தில் கேட்கும் போது தாங்கள் அனுமதி கேட்டிருக்கின்றோம். இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்கின்றார்கள். எனவே அரச திணைக்களமே பாதுகாக்க வேண்டிய வளங்களை அழித்து ஒரு குடியேற்றத்திட்டத்தை உருவாக்குவதற்கான முதற்படிகளை இங்கே மேற்கொள்வதாகத் தோகின்றது.

2015ன் முன்னர் சிலர் இங்கு வந்து பயிர் செய்தhர்கள். ஆனால் 2015ல் இருந்து அது முற்றாகத் தடுக்கப்பட்டது, வனஇலாகா அதிகாரிகள் அவ்வாறானவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கலும் செய்திருந்தார்களாம் என்ற சொல்லுகின்றார்கள். ஆனால் தற்போது வெறுமனே பிரஜைகள் அல்ல சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்குப் பிரித்துக் கொடுத்து மரமுந்திரிகைச் செய்கை இடம்பெறுகின்றது. மேய்ச்சற்தரைக்கு வருகின்ற மாடுகள் இவர்களால் போடப்பட்டிருக்கும் கம்பி வேலிகளிலே சிக்குண்டு இறக்கின்றன. ஆனால் அதைவிட முக்கியமாக ஒரு பாரிய குடியயேற்றத் திட்டமொன்ற ஆரம்பமாகியிருக்கின்றதென்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகின்றது.

இதற்கெதிராகச் சட்டநடவடிக்கை எடுக்க முடியும். இதனை நாங்கள் ஆராய்ந்து சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார்.

Related Articles

அரசியல் கைதிகளைச் சந்தித் முன்னணி எம்.பிக்கள்

முன்னணி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல்கைதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அமைதிக்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள்! சிறீதரன்

அமைதிக்காகவும் மனிதாபிமானத்திற்காகவும் போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் 33 ஆவது ஆண்டு நினைவு...

தொல்லியல் திணைக்களம் தவிசாளர் நிரேசிற்கு எதிராக வழக்கு

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள...

Stay Connected

6,849FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

அரசியல் கைதிகளைச் சந்தித் முன்னணி எம்.பிக்கள்

முன்னணி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல்கைதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அமைதிக்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள்! சிறீதரன்

அமைதிக்காகவும் மனிதாபிமானத்திற்காகவும் போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் 33 ஆவது ஆண்டு நினைவு...

தொல்லியல் திணைக்களம் தவிசாளர் நிரேசிற்கு எதிராக வழக்கு

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள...

அசேல சம்பத் பிணையில் விடுதலை!

உணவக உரிமையாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர் 14ஆம் திகதி மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இன்று வரை...

உயர்நீதிமன்றில் சட்டமா அதிபரால் மனுத்தாக்கல்!

2016ஆம் ஆண்டு  மார்ச் 29ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி சட்டமா அதிபரால் உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி...