29.4 C
Jaffna
Monday, April 19, 2021

வரும் திங்கட்கிழமை தமிழ்த் தேசிய துக்க தினமாக பிரகடனம் – தமிழ் சிவில் சமூகம் முக்கிய கோரிக்கை

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் வண. பிதா இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவையொட்டி அவரால் தமிழ்த் தேசியத்துக்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தேசம் எங்கும் எதிர்வரும் 5ஆம் திகதி திங்கட்கிழமை தமிழ்த் தேசிய துக்க தினமாகப் பிரகடனப்படுத்துகின்றோம்.

இதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள், பொதுமக்கள் அனைவரும் ஆதரவு வழங்குவதுடன்,திங்கட்கிழமை அனைவரும் தங்களின் வீடுகளிலும், பொது இடங்களிலும், வணிக நிலையங்களிலும் கறுப்புக் கொடிகளைப் பறக்க விட்டும், உங்கள் உடைகளில் கறுப்புப் பட்டிகளை அணிந்தும் துக்கத்தை வெளிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என வடக்கு – கிழக்கு தமிழ் சிவில் சமூகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம், வடக்கு, -கிழக்கு சிவில் சமூக சம்மேளனம், வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, பல்சமயங்களின் ஒன்றியம் மட்டக்களப்பு, முதியோர் சம்மேளனம் -மட்டக்களப்பு, வெண்மயில் அமைப்பு – மட்டக்களப்பு, அமெரிக்கன் மிஷன் -மட்டக்களப்பு, சடோ லங்கா நிறுவனம் – மட்டக்களப்பு, அரச சாரா தொண்டு நிறுவனங்களின் இணையம், தமிழர் நலன் காப்பகம் – மட்டக்களப்பு, சிவகுரு ஆதீனம் -யாழ்ப்பாணம், தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு – மட்டக்களப்பு, புழுதி சமூக உரிமைக்கான அமைப்பு – திருகோணமலை, குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு, உலகத்தமிழர் மாணவர் ஒன்றியம், இராவண சேனை – திருகோணமலை, வடக்கு – கிழக்கு பொதுஅமைப்புகள் மற்றும் சம்மேளனங்கள் ஆகியன ஒன்றிணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் வண. பிதா இராயப்பு ஜோசப் ஆண்டகை இயற்கை எய்திய செய்தியானது தமிழர் தேசத்தை ஆழாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. ஆயரின் இழப்பானது தமிழர் தேசத்துக்கு அளவிட முடியாத ஒரு பேரிழப்பாகும். அவரின் இழப்பால் தமிழ்த் தேசியம் ஒரு சிறந்த தலைவனை இழந்து நிற்கின்றது.

தமிழரின் உரிமைக்காக மதங்களை கடந்து தேசியத்தின் பால் ஓங்கி ஒலித்த குரலை தமிழர் தேசம் இன்று இழந்து நிற்கின்றது. 2009ஆம் ஆண்டு போர் மெளனிக்கப்பட்ட பின் தமிழர் தேசம் திக்கற்றவர்களாக நின்ற நேரம் அவர்களுக்கு நம்பிக்கை ஒளியாக விளங்கியவரே இராயப்பு ஜோசப் ஆண்டகை.

தமிழினத்தின் மீதான இனப்படுகொலையை, இறுதிப் போரில் கொல்லப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கையை பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் பொது வெளியிலும் சர்வதேசத்திலும் அறுதியிட்டு தெரிவித்தவர்.

பாதிக்கப்பட்ட தமிழினத்தின் நீதிக் குரலாக, சாட்சியாக இருந்த மிகப்பெரும் ஆளுமையை நாம் இன்று இழந்து நிற்கின்றோம். ஆண்டகையின் மறைவையொட்டி அவரால் தமிழ்த் தேசியத்துக்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக இன்று முதல் இறுதி வணக்க நிகழ்வு வரை வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தேசம் எங்கும் துக்க தினங்களாகவும், எதிர்வரும் 5ஆம் திகதி திங்கட்கிழமை தமிழ்த் தேசிய துக்க தினமாகவும் பிரகடனப்படுத்துகின்றோம்.

இதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள், பொதுமக்கள் அனைவரும் ஆதரவு வழங்குவதுடன், திங்கட்கிழமை அனைவரும் தங்களின் வீடுகளிலும், பொது இடங்களிலும், வணிகநிலையங்களிலும் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டும், உங்கள் உடைகளில் கறுப்புப்பட்டிகளை அணிந்தும் துக்கத்தை வெளிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

அதே நாளில் தமிழகம் மற்றும் புலம்பெயர் தேசம் எங்கும் வாழும் தமிழ் மக்களும் கறுப்புப் பட்டி அணிந்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.

Related Articles

அரசியல் கைதிகளைச் சந்தித் முன்னணி எம்.பிக்கள்

முன்னணி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல்கைதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அமைதிக்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள்! சிறீதரன்

அமைதிக்காகவும் மனிதாபிமானத்திற்காகவும் போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் 33 ஆவது ஆண்டு நினைவு...

தொல்லியல் திணைக்களம் தவிசாளர் நிரேசிற்கு எதிராக வழக்கு

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள...

Stay Connected

6,849FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

அரசியல் கைதிகளைச் சந்தித் முன்னணி எம்.பிக்கள்

முன்னணி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல்கைதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அமைதிக்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள்! சிறீதரன்

அமைதிக்காகவும் மனிதாபிமானத்திற்காகவும் போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் 33 ஆவது ஆண்டு நினைவு...

தொல்லியல் திணைக்களம் தவிசாளர் நிரேசிற்கு எதிராக வழக்கு

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள...

அசேல சம்பத் பிணையில் விடுதலை!

உணவக உரிமையாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர் 14ஆம் திகதி மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இன்று வரை...

உயர்நீதிமன்றில் சட்டமா அதிபரால் மனுத்தாக்கல்!

2016ஆம் ஆண்டு  மார்ச் 29ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி சட்டமா அதிபரால் உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி...