29.4 C
Jaffna
Monday, April 19, 2021

பிரான்ஸில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தீவிரமடையும் கொரோனா தொற்று!

பிரான்ஸில் கொரோனா வைரஸின் மாறுபாடடைந்த திரிபுகளின் பரவல் மூன்றாவது அலையைத் தோற்றுவித்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது.
பாடசாலைகளை மூடுவதையும் உள்ள டக்கிய தேசிய அளவிலான பொது முடக்கம் ஒன்றை அறிவிக்க வேண்டியகட்டத்தை நாடு நெருங்குவதாக எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 
மருத்துவமனைகளின் அவசர பிரிவுகளில் சிகிச்சை பெறுபவர்களது எண்ணி க்கை 4ஆயிரத்து 872 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கடந்த ஆண்டு நவம்பரில் இரண்டாவது பொது முடக்ககம் அறிவிக் கப்பட்டபோது இருந்த அளவை அது தாண்டிவிட்டது.
பாரிஸ் பிராந்தியத்தில் தமிழர்கள் உட்பட வெளிநாட்டு குடியேற்றவாசிகள் பெரும்பான்மையாக வசிக்கின்ற Seine-Saint- Denis (93)மாவட்டம் நாட்டிலேயே மிக மோசமான வைரஸ் தொற்றுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நேற்று மாலை தொற்று வீதம் (Incidnce) 790 என்ற அளவை எட்டி உள்ளது.
இங்குள்ள பொண்டி(Bondy) நகரத்தில் சனத் தொகையில் ஒரு வீதத்தினர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உள்ள னர் என்று நகரின் மேயர் தெரிவித்துள் ளார். 
நாடளாவிய ரீதியில் விரைந்து காத்திர மான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாரிஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த மருத்து வமனைகளின் நெருக்கடிகால சேவைகளுக்குப் பொறுப்பான பணிப்பாளர்கள் 41 பேர் அரசுத் தலைமையிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தேசிய அளவில் மூன்றாவது பொது முடக்கம் ஒன்றை இனிமேல் அறிவிப்ப தில்லை என்று கடந்த ஜனவரியில் எடுத்த தனது முடிவில் அரசுத்தலைவர் மக்ரோன் உறுதியாக இருந்துவருகிறார்.
19 மாவட்டங்களில் தற்சமயம் அமுல் செய்யப்பட்டுவருகின்ற மிகத் தளர்வான
கட்டுப்பாடுகள் தொற்றைத் தடுக்கப் போதுமானவை அல்ல என்று மருத்து வர்களும் தொற்றுநோயியலாளர்களும் கூறிவருகின்றனர்.
பாடசாலைகளிலும் மாணவர்களிடையே தொற்றுக்கள் அதிகரித்துள்ளன. சுகா
தார நிலைவரத்தை ஆராய்வதற்காக பாதுகாப்புச் சபை வரும் புதன்கிழமை
கூட உள்ளது. அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அந்ததக் கூட்டத்தில்
தீர்மானிக்கப்படும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Articles

அரசியல் கைதிகளைச் சந்தித் முன்னணி எம்.பிக்கள்

முன்னணி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல்கைதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அமைதிக்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள்! சிறீதரன்

அமைதிக்காகவும் மனிதாபிமானத்திற்காகவும் போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் 33 ஆவது ஆண்டு நினைவு...

தொல்லியல் திணைக்களம் தவிசாளர் நிரேசிற்கு எதிராக வழக்கு

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள...

Stay Connected

6,849FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

அரசியல் கைதிகளைச் சந்தித் முன்னணி எம்.பிக்கள்

முன்னணி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல்கைதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அமைதிக்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள்! சிறீதரன்

அமைதிக்காகவும் மனிதாபிமானத்திற்காகவும் போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் 33 ஆவது ஆண்டு நினைவு...

தொல்லியல் திணைக்களம் தவிசாளர் நிரேசிற்கு எதிராக வழக்கு

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள...

அசேல சம்பத் பிணையில் விடுதலை!

உணவக உரிமையாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர் 14ஆம் திகதி மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இன்று வரை...

உயர்நீதிமன்றில் சட்டமா அதிபரால் மனுத்தாக்கல்!

2016ஆம் ஆண்டு  மார்ச் 29ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி சட்டமா அதிபரால் உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி...