மண்ணுக்குள் புத்தரைத் தேடாதே மனதுக்குள் புத்தரைத் தேடு என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கோசம் எழுப்பப்பட்டது
கிளிநொச்சி உருத்திரபுரம் சிவாலய வளாகத்தில் அகழ்வு பணி மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம்(24-03-201) மூன்றாவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது கிளிநொச்சி மாவட்டத்தில் தொன்மை வாய்ந்த சிவாலயமாக காணப்படுகின்ற உருத்திரபுரம் சிவாலயத்தில் தொல்லியல் திணைக்களத்தால் இன்றைய தினம் அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் நேற்று முன்தினம்(22-03-2021)ஆரம்பிக்கப்பட்ட குறித்த கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது தற்போது போலிஸார் வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடிய வேளையில் தொல்லியல் திணைக்களத்தினர் வருகை தந்ததும் போராட்டத்தில் ஈடுபட்டோர் கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரு தரப்பினரும் நீதிமன்றம் செல்லத்தயார் எனவும் கூறினர் பின்னர ஆலயபரிபாலன சபையின் தலைவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பசுபதிப்பிள்ளையிடம் வாக்கு மூலமும் பொலீசாரினால் பதிவு செய்யப்பட்டது.