March 3, 2021, 9:10 pm

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி; யோகேஸ்வரனிடம் விசாரணை

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் பங்கெடுத்தமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களிடம் பொத்துவில் மற்றும் கல்முனை காவல்துறையினர் நேற்றைய தினம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றுச் சென்றனர்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

அண்மையில் நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி பேரணியில் கலந்து கொண்டதற்காக கல்முனை காவல்துறையினரும், பொத்துவில் காவல்துறையினரும் விசாரணைகளை நடாத்தினர்.

21.02.2021 அன்று காலை வேளை வாழைச்சேனை விபுலானந்தர் வீதியிலுள்ள எனது இல்லத்திற்கு வருகைதந்த பொத்துவில் காவல்துறையினர் நான் தாய்மொழி தின நிகழ்வில் கலந்துகொண்டதன் நிமித்தம் சிலமணிநேரம் அங்கிருந்ததோடு, பின்னர் அன்றையதினம் பிற்பகல் வேளையில் நான் செல்லம் தியேட்டர் மோகன் அவர்கள் நடாத்திய தாய்மொழிதின நிகழ்வில் கலந்துகொண்டபோது, குறித்த நிகழ்வு நடைபெற்ற செல்லம் தியேட்டருக்கு வருகைதந்து அங்கு என்னை ஒரு மணிநேரம் விசாரணைக்குட்படுத்தினர்.

பொத்துவில் காவல்துறையினரும் மூவர் அந்த விசாரணையை மேற்கொண்டனர். நீதிமன்றக் கட்டளையினை மீறி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டதாக விசாரணையானது அமைந்திருந்தது. அவ்விசாரணை நிறைவடைவதற்கு முன்பே செல்லம் தியேட்டருக்கு கல்முனை காவல்துறையினரும் வருகைதந்து நீதிமன்றக்கட்டளை இருக்கும்போது கல்முனையில் குறித்த பேரணியில் கலந்துகொண்டதாக அவர்களும் என்னை விசாரணைக்குட்படுத்தினர்.

நான் வீட்டில் இல்லாத காரணத்தினாலும், தாய்மொழிதின நிகழ்வில் கலந்துகொண்ட செல்லம் தியேட்டரில் மோகன் அவர்களால் ஒழுங்குசெய்து தரப்பட்ட தனிமண்டபத்திலேயே அனைத்து விசாரணைகளையும் காவல்துறையினர் மேற்கொண்டனர் என்று தெரிவித்தார்.

Related Articles

தமிழ்நாட்டு அரசியலில் திடீர் திருப்பம்!! அரசியலில் இருந்து விலகினார் சசிகலா

நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பேன் என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சித் தொடர தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து...

தற்கொலை செய்து கொண்ட பிரபல செய்தி வாசிப்பாளர் !

தமிழ் சினிமா திரையுலகில் பல பிரபலங்கள் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர்.அந்த வரிசையில் தற்போது மாலைமுரசு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் கோபிநாத் அவர்களும் இணைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்த, வரிசையில்...

ஆப்கானில் ஊடக ஊழியர்கள் சுட்டுக் கொலை !

கிழக்கு ஆப்கானிஸ்தான் நகரமான ஜலாலாபாத்தில் நேற்று மூன்று பெண் ஊடக ஊழியர்கள் பணியினை முடித்துவிட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.உயிரிழந்த பெண்கள் தமது ஊழியர்கள் என உள்ளூர் ஒளிபரப்பாளர் எனிகாஸ்...

Stay Connected

6,571FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

தமிழ்நாட்டு அரசியலில் திடீர் திருப்பம்!! அரசியலில் இருந்து விலகினார் சசிகலா

நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பேன் என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சித் தொடர தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து...

தற்கொலை செய்து கொண்ட பிரபல செய்தி வாசிப்பாளர் !

தமிழ் சினிமா திரையுலகில் பல பிரபலங்கள் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர்.அந்த வரிசையில் தற்போது மாலைமுரசு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் கோபிநாத் அவர்களும் இணைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்த, வரிசையில்...

ஆப்கானில் ஊடக ஊழியர்கள் சுட்டுக் கொலை !

கிழக்கு ஆப்கானிஸ்தான் நகரமான ஜலாலாபாத்தில் நேற்று மூன்று பெண் ஊடக ஊழியர்கள் பணியினை முடித்துவிட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.உயிரிழந்த பெண்கள் தமது ஊழியர்கள் என உள்ளூர் ஒளிபரப்பாளர் எனிகாஸ்...

பரீட்சை நிலையங்களுக்கு அருகில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்போரை கைது செய்ய நடவடிக்கை

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை இடம்பெறும் பரீட்சை மண்டபங்களுக்கு அருகில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி துண்டு பிரசுரங்களை விநியோகிப்பவர்களை கைது செய்வதற்கான விஷேட சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறை...

மூன்று பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய் – கிளிநொச்சியில் பரிதாபம்

தனது 2, 5 மற்றும் 8 வயதுடைய பிள்ளைகளுடனேயே குறித்த தாய் கிணற்றில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.https://youtu.be/e8HwlFygWekதாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதேவேளை இரண்டு வயதுப் பிள்ளையின் சடலத்தை மாத்திரம் மீட்டுள்ளதாக எமது செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.கிளிநொச்சி...