February 22, 2021, 12:33 pm

குருந்தூரில் 13 நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர்கள் வாழ்ந்தார்கள் – பேராசிரியர் புஸ்பரட்ணம்

குருந்தூரில் 13 நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு பாலி சிங்கள இலக்கியங்களில் ஆதாரம் உண்டு என யாழ். பல்கலைகழகத்தின் வரலாற்றுத் துறை சிரேஸ்ட பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ள அவர், “வன்னிப் பிரதேசத்தில் உள்ள வரலாற்று பழமை வாய்ந்த முக்கிய வரலாற்று மையங்களில் குருந்தலூர் ( குருந்தூர்) ஒன்றாகும். பாலி இலக்கியங்களில் இவ்விடம் குருந்தகம என்றும் தமிழில் இது குருந்தலூர் என்றும் அழைக்கப்படுகின்றது.

இந்த குருந்தலூர் என்பதே தொன்மைமையான தமிழ் இடப்பெயர் என்பது ஒரு தொன்மையான ஆதாரமாக காணப்படுகின்றது

இந்த குருந்தலூரில் பௌத்த மதம் பரவுவதற்கு முன்னர் குருந்தலூர் (குருந்தூர்) அதன் சுற்றாடலிலும் ஆதி இரும்பு காலத்து பெருங்கற்கால பண்பாட்டு இருந்துள்ளது. ஆகவே அந்தப் பண்பாட்டு மக்களில் ஒரு பிரிவினர் பௌத்த மதம் பரவிய பொழுது அந்த மதத்தையும் தழுவியிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

இந்த குருந்தலூர் 13 ஆம் நூற்றாண்டில் கலிங்கமாகன் சாகவனுடைய ஆட்சியில் மிக முக்கிய ஒரு நகராக இருந்ததை சூலவம்சமும் இராஜாவெலிய என்ற சிங்க இலக்கியமும் குறிப்பிடுகின்றது.

இந்த இடத்தில் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட லூயிஸ் வன்னிக் கையேடு என்று நூலில், தான் அந்த இடத்துக்கு சென்ற பொழுது அங்கே பௌத்த கட்டட எச்சங்களோடு இந்து ஆலயத்தின் எச்சங்களையும் கண்டதாகக் குறிப்பிடுகிறார்.

அதிலேயே நந்தியோடு உடைந்த நந்தியும் அதனோடு இணைந்த கட்டட அழிபாடுகளையும் தான் கண்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.

1870இல் போல் என்பவர் தான் இந்த இடத்துக்குச் சென்றபொழுது பௌத்த கட்டட எச்சங்களுடன் தமிழ் கல்வெட்டுடன் கூடிய இந்து ஆலயங்களின் வழிபாடுகளையும் கண்டதாகக் குறிப்பிடுகிறார். ஆகவே இந்த குருந்தலூர் என்பது பௌத்த இந்து ஆலயங்கள் தோன்றி வளர்ந்த இடங்களாக காணப்படுகின்றன.

எனவே இந்த குருந்தலூரில் 13 நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு பாலி சிங்கள இலக்கியங்களில் ஆதாரம் உண்டு.

ஆகவே இந்த குருந்தலூர் அகழ்வாய்வில் கிடைக்கும் தொல்பொருள் சான்றுகளை வைத்துக்கொண்டுதான் அது பாலி சிங்கள இலக்கியங்கள் கூறுகின்ற உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தலாம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

இலங்கை இராணுவத்தை உன்னிப்பாக கவனிக்கும் அமெரிக்கா

இலங்கை இராணுவத்தில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் குறிப்பிடுகையில்,”அமெரிக்கச் சட்டங்கள் மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களங்களின் கொள்கையின் அடிப்படையில் பாரிய மனித...

#P2P தொடர்பில் சுமந்திரனிடமும் விசாரணை

#P2P போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் அவர்களிடம் இலங்கை காவல்த் துறையினரால் வாக்குமூலம் பெறப்பட்டது.

பிரித்தானிய தூதுவரை சந்தித்த சிறிதரன், சுமந்திரன்

கெளரவ பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமாகிய சுமந்திரன் அவர்களும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களும் இன்று மதியம் பிரித்தானிய உயர் ஸ்தாணிகர் சேரா ஹள்டன் அம்மையாரை கொழும்பில் சந்தித்து இன்று...

Stay Connected

6,516FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

இலங்கை இராணுவத்தை உன்னிப்பாக கவனிக்கும் அமெரிக்கா

இலங்கை இராணுவத்தில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் குறிப்பிடுகையில்,”அமெரிக்கச் சட்டங்கள் மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களங்களின் கொள்கையின் அடிப்படையில் பாரிய மனித...

#P2P தொடர்பில் சுமந்திரனிடமும் விசாரணை

#P2P போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் அவர்களிடம் இலங்கை காவல்த் துறையினரால் வாக்குமூலம் பெறப்பட்டது.

பிரித்தானிய தூதுவரை சந்தித்த சிறிதரன், சுமந்திரன்

கெளரவ பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமாகிய சுமந்திரன் அவர்களும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களும் இன்று மதியம் பிரித்தானிய உயர் ஸ்தாணிகர் சேரா ஹள்டன் அம்மையாரை கொழும்பில் சந்தித்து இன்று...

கோட்டாபய நியமித்த செயலாளரை பதவியிலிருந்து நீக்கினார் மகிந்தராஜபக்ச

கோட்டாபய நியமித்த செயலாளரை பதவியிலிருந்து நீக்கினார் மகிந்தவிவசாய அமைச்சின் செயலாளராக பதவி வகித்து வந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா அந்தப் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.தனிப்பட்ட காரணங்களால்...

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி; யோகேஸ்வரனிடம் விசாரணை

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் பங்கெடுத்தமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களிடம் பொத்துவில் மற்றும் கல்முனை காவல்துறையினர் நேற்றைய தினம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றுச் சென்றனர்.இது தொடர்பில்...