March 3, 2021, 9:05 pm

முல்லைத்தீவில் 20 ஏக்கருக்கு மேல் காடழிப்பு ; ஆனாலும் பாதுகாக்கின்றோம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மணவாளன் பட்டமளிப்பு கிராமத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்  ஒருவரால்   சுமார் 20 ஏக்கர் வரையான காடுகள் அழிக்கப்பட்டு காணிகள் அபகரிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பல மாதங்களாக கனரக இயந்திரங்கள் கொண்டு வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் எல்லைகளையும் தாண்டி காடுகள் அழிக்கப்பட்டு காணிகள் அபகரிக்கப்படுகின்றபோதும்   பொலிசாரோ வனவளத்திணைக்களமோ பிரதேச செயலகமோ  இன்றுவரை எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருக்கின்றமை தொடர்பில் ஐயம் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வளவு நடந்தும் காடுகளை பாதுகாக்கின்றோம் என்று சொல்லும் கோட்டபாய அரசு. இரு தினங்களிற்கு முன்னர் கூட கோட்டபாய காடுகளை பாதுகாக்கின்றோம் என்று “கிராமங்களுடன் உரையாடல்” சந்திப்பிகன் போது கூறியமை நோக்கத்தக்கது.

காடுகளை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் அரச முகவர் நிறுவனமாக வனவளத்திணைக்களம் மக்களின் வாழ்வாதர காணிகள், மற்றும் விவசாயக் காணிகளை பிடிப்பதில் காட்டக் கூடிய ஆர்வத்தினை இவ்வாறு காடழிப்பு நடவடிக்கைகளின் போது காட்டாமல் இருப்பது தமிழர் நிலங்களை அபகரிப்பது மட்டுமே அதன் நோக்கம் என்பதை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது.

தொடர்ச்சியாக காடழிப்பு இடம்பெறும் போதும் இன்றுவரை நடவடிக்கை எடுக்காமல் காடு அழிக்கப்படுகின்றமை தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக காடு அழிக்கப்பட்டு  சுமார் 20 ஏக்கருக்கு மேற்பட்ட காடுகள் அழிக்கப்பட்டு இருக்கின்ற போதும் இதற்கான எந்த விதமான ஆவணங்களும் இல்லாத நிலையில் சட்டவிரோதமான முறையில் இந்த காடுகள் அழிக்கப்படுவதாக தெரியவருகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஊடாக குறித்த இடிக்கப்பட்ட காடுகளுக்கு உரிய ஆவணங்கள் தொடர்பிலான தகவல்கள் கோரப்பட்டபோதும் இன்று வரை பிரதேச செயலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கான பதில்களை தராமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றமை பிரதேச செயலகத்தின் அதிகாரிகளும் இந்த காடழிப்பு நடவடிக்கைக்கு உடந்தையாக இருக்கிறார்களா என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்தி இருக்கின்றது.

இவ்வாறே கிராமங்களில் ஏழை மக்கள் பலர் தமது வாழ்விடத்துக்காக அரை  ஏக்கர் காணிகளை கூட பெற்றுக்கொள்ள முடியாது  திண்டாடி வருகின்றனர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பண பலத்தையும்  அரசியல் செல்வாக்கையும்  பயன்படுத்தி அரச அதிகாரிகள் பொலிசார் அனைவரம் நடவடிக்கை எடுக்காது  பல ஏக்கர் காடுகள் அழிக்கப்படுகின்றன குறித்த விடயம் தொடர்பில் நாங்கள் காடுகளை அழித்து காணி பிடிக்க விடுவார்களா என  மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

எனவே குறித்த மணவாளன் பட்டமளிப்பு பகுதியில் குறித்த பிரதேச சபை உறுப்பினரால் பிடிக்கப்பட்டிருக்கின்றன 20 ஏக்கருக்கு மேற்பட்ட அளவிலான இந்த காடுகள் எவ்வாறு இடிக்கப்பட்டது இதற்கான ஆவணங்கள் உள்ளதா இல்லை எனில் இதற்கு துணைபோன அதிகாரிகளுக்கு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் மிக விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஏழை மக்களுக்கு வாழ்விடங்களுக்கு உரிய காணிகளை கூட பெற்றுக் கொடுக்க முடியாத நிலையில் இவ்வாறு பண பலத்தை பயன்படுத்தி இடம்பெறுகின்ற நடவடிக்கைக்கு உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்காமல் மௌனமாக இருக்கின்றமை தொடர்பில்  மக்கள் கடும் அதிருப்தி வெளியிடுகின்றனர்.

Related Articles

தமிழ்நாட்டு அரசியலில் திடீர் திருப்பம்!! அரசியலில் இருந்து விலகினார் சசிகலா

நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பேன் என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சித் தொடர தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து...

தற்கொலை செய்து கொண்ட பிரபல செய்தி வாசிப்பாளர் !

தமிழ் சினிமா திரையுலகில் பல பிரபலங்கள் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர்.அந்த வரிசையில் தற்போது மாலைமுரசு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் கோபிநாத் அவர்களும் இணைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்த, வரிசையில்...

ஆப்கானில் ஊடக ஊழியர்கள் சுட்டுக் கொலை !

கிழக்கு ஆப்கானிஸ்தான் நகரமான ஜலாலாபாத்தில் நேற்று மூன்று பெண் ஊடக ஊழியர்கள் பணியினை முடித்துவிட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.உயிரிழந்த பெண்கள் தமது ஊழியர்கள் என உள்ளூர் ஒளிபரப்பாளர் எனிகாஸ்...

Stay Connected

6,571FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

தமிழ்நாட்டு அரசியலில் திடீர் திருப்பம்!! அரசியலில் இருந்து விலகினார் சசிகலா

நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பேன் என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சித் தொடர தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து...

தற்கொலை செய்து கொண்ட பிரபல செய்தி வாசிப்பாளர் !

தமிழ் சினிமா திரையுலகில் பல பிரபலங்கள் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர்.அந்த வரிசையில் தற்போது மாலைமுரசு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் கோபிநாத் அவர்களும் இணைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்த, வரிசையில்...

ஆப்கானில் ஊடக ஊழியர்கள் சுட்டுக் கொலை !

கிழக்கு ஆப்கானிஸ்தான் நகரமான ஜலாலாபாத்தில் நேற்று மூன்று பெண் ஊடக ஊழியர்கள் பணியினை முடித்துவிட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.உயிரிழந்த பெண்கள் தமது ஊழியர்கள் என உள்ளூர் ஒளிபரப்பாளர் எனிகாஸ்...

பரீட்சை நிலையங்களுக்கு அருகில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்போரை கைது செய்ய நடவடிக்கை

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை இடம்பெறும் பரீட்சை மண்டபங்களுக்கு அருகில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி துண்டு பிரசுரங்களை விநியோகிப்பவர்களை கைது செய்வதற்கான விஷேட சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறை...

மூன்று பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய் – கிளிநொச்சியில் பரிதாபம்

தனது 2, 5 மற்றும் 8 வயதுடைய பிள்ளைகளுடனேயே குறித்த தாய் கிணற்றில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.https://youtu.be/e8HwlFygWekதாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதேவேளை இரண்டு வயதுப் பிள்ளையின் சடலத்தை மாத்திரம் மீட்டுள்ளதாக எமது செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.கிளிநொச்சி...