March 7, 2021, 9:20 am

இலங்கையை எதிர்த்தால் மனித பேரவை நிலை அதோ கதி தான்

ஐக்கிய நாடுகள் மனித உரிகைள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா,கனடா,ஜேர்மனி,மொன்டர்கிரினோ  மற்றும்  மெஸடோனியா     ஆகிய 5  நாடுகள் புதிய பிரேரணையை  கொண்டுவரவுள்ளதாக அறியமுடிகிறது. இவ்வாறான நிலை இடம்பெற்றால் மனித உரிமை பேரவை இரண்டாக பிளவுப்படும். இதனை பெரும்பாலான நாடுகள் விரும்பவில்லை ஆகவே  இலங்கையின் உள்ளக விவகாரத்தில் தலையிடுவதை மேற்குலக நாடுகளும்,மனித உரிமை பேரவையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தருஸ்மன் அறிக்கையினை அடிப்படையாக கொண்டு இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.தருஸ்மன் அறிக்கை  பொய்யான காரணிகளை உள்ளடக்கியுள்ளது. என்பதை சர்வதேச யுத்த விசேட நிபுணர்கள் ஆதாரபூர்வமாக அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள். இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் அண்மையில் வெளியிட்ட அறிக்கையை  அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கும்.

ஜெனிவா விவகாரத்தில் இலங்கை பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொள்வதற்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும்.இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு இலங்கை இணையனுசரனை வழங்குவதாக அரசாங்கம் குறிப்பிட்டதால் அக்காலத்தில் இலங்கைக்கு ஆதரவாக மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் ஏதும் செயற்படவில்லை.

நாட்டுக்கு எதிரான பிரேரணைகளில் இருந்து அரசாங்கம் விலகும் என்ற வாக்குறுதியை நாட்டு மக்களுக்கு வழங்கியிருந்தோம். இதற்கமைய  கடந்த வருடம் இடம் பெற்ற மனித உரிமை பேரவையில் 30/1 பிரேரணையில் இருந்து அரசாங்கம் விலகிக் கொண்டது. இதன் பின்னரே மனித உரிமை பேரவை இலங்கைக்கு எதிராக அதிக அழுத்தங்களை பிரயோகிக்க ஆரம்பித்தது.

கொவிட்-19 வைரஸ் தாக்கம் பூகோளிய மட்டத்தில் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் ஒரு நாட்டை சர்வதேச அரங்கில் நெருக்கடிக்குள்ளாக்குவது பொருத்தமற்ற செயற்படாகும். இம்முறை இடம்பெறவுள்ள கூட்டத்தொடரில் பெரும்பாலான பலம் கொண்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்படும். பிரித்தானியா,கனடா,ஜேர்மனி,மொன்டர்கிரினோ,மெசடோனியா ஆகிய 5 நாடுகளும் ஒன்றினைந்து இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணையை கொண்டு வரவுள்ளதாக அறிய முடிகிறது.

இந்நாடுகள் இலங்கைக்கு எதிராக பிரேரணையினை கொண்டு வந்தால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இரண்டாக பிளவுப்படும். இதனை பெரும்பாலான நாடுகள் விரும்பவில்லை. ஆகவே இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதை சர்வதேச நாடுகள் தவிர்த்துக் கொளள் வேண்டும் என்று குறிப்பிடுகிறோம்.நாடு என்ற ரீதியில் அனைத்து தரப்பினருடனும் இணக்கமாகவே செயற்படுவோம் என்றார்.

Related Articles

திங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள் அனைவரும் கடமைக்கு

அரசாங்க ஊழியர்கள் அனைவரும் எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அரச சேவையை தடையின்றி மேற்கொள்ளும் வகையில், வழமை போன்று சேவைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

தீர்வில்லையேல் உணவு தவிர்ப்பு போராட்டம் – சுகாதார தொண்டர்கள்

இன்று மாலைக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துற்கு முன்னால் இன்று (07) நடாத்திய ஊடகவியலாளர்...

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் கவனயீர்ப்பு போராட்டம்

கொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (07) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை 6.30...

Stay Connected

6,575FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

திங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள் அனைவரும் கடமைக்கு

அரசாங்க ஊழியர்கள் அனைவரும் எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அரச சேவையை தடையின்றி மேற்கொள்ளும் வகையில், வழமை போன்று சேவைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

தீர்வில்லையேல் உணவு தவிர்ப்பு போராட்டம் – சுகாதார தொண்டர்கள்

இன்று மாலைக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துற்கு முன்னால் இன்று (07) நடாத்திய ஊடகவியலாளர்...

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் கவனயீர்ப்பு போராட்டம்

கொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (07) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை 6.30...

வவுனியா வைத்தியரின் வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய குற்றசாட்டில் மூவர் கைது!

கடந்த 1ஆம் திகதி அதிகாலை 12.30 மணியளவில் வவுனியா - வைரவபுளியங்குளம், 6 ஆம் ஒழுங்கையிலுள்ள வைத்தியரின் வீட்டிற்கு வீடுபுகுந்த நான்கு பேர் கொண்ட இனந்தெரியாத நபர்கள், உறங்கி கொண்டிருந்த வைத்தியர் மற்றும்...

பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை உயர்வு

இந்த வருடத்தின் கடந்த ஜனவரி மாதத்தை காட்டிலும் பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையானது 1682 ஆக காணப்பட்டுள்ளது.எனினும், கடந்த...