March 7, 2021, 6:28 pm

அரச இயந்திரத்தால் ஒருமித்தநாடாகவும் மனதளவில் இரண்டு நாடாகவே இலங்கை இருக்கிறது சிறீதரன் எம்.பி

அரச இயந்திரத்தால் ஒருமித்தநாடாகவும் மனதளவில் இரண்டு நாடாகவே இலங்கை இருக்கிறது எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொண்டமைக்காக கிளிநொச்சி பொலிசாரினால் நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் வைத்து வாக்கு மூலம் பெறப்பட்டது. குறித்த வாக்கு மூலத்தில் பொலிசாரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் இந்த நாட்டிலே தமிழர்களின் முப்படைகளால் காணிகள் வன்பறிப்பு செய்யப்பட்டிருக்கிறது தொல்லியல் திணைக்களம் என்ற பெயரிலும் வனவளத்திணைக்களம் வனஜீவராசிகள் திணைக்களம் போனறவை ஊடாக காணிகள் சுவீகரிப்பு செய்யப்படுகிறது. இலங்கையில் பௌத்த விகாரை க்காக காணிகள் உறுதியோடு வழங்கப்படுகிறது ஆலயங்களுக்கு குத்தகை முறையிலேதான் வழங்கப்படுகிறது. முப்படையினரினை பயன்படுத்தி ஒரு தேசமாக இலங்கையை ஆட்சியாளர்கள் வைத்திருக்கிறார்களே தவிர மனதளவில் இரண்டு நாடாகவே இருக்கிறது. அந்த வகையில் தான் அரசும் செயற்படுகிறது .

இந்த போராட்டம் கூட இந்த நாட்டிலே தமிழ் பேசும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவே  இடம்பெற்றது. குறித்த போராட்டமானது வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த போராட்டத்திற்கான அழைப்பு எமக்கு எவராலும் தனித்து விடப்படவில்லை எனவும் தாம் பத்திரிகையில் வெளியான செய்திகளை அடிப்படையாக வைத்தே இந்த பேரணியில் கலந்து கொண்டதாகவும் நாம் இந்த ஆர்ப்பாட்டத்தினை நாம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையிலோ இலங்கை இறையாண்மைக்கு எதிராகவோ ஆயுதவழியிலோ போராடவில்லை எனவும் அரச இயந்திரங்களால் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்காகவும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவுமே அமைதிவழியில் இந்த போராட்டம் நடாத்தபட்டது. சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் வராத கொரோனா  தமிழர்கள் நடத்தும் போராட்டத்திலா வரும்  எனவும் பொலீசாரிடம் தனது வாக்கு மூலத்தில் கேள்வி எழுப்பினார் . சுமார் 1.30 மணித்தியாலங்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் பொலிசார் வாக்கு மூலத்தை பெற்றுக் கொண்டனர்

Related Articles

500 ஐ கடந்தது கொரோனா உயிரிழப்பு !

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.இந்நிலையில், இலங்கையில் கொரோனாவினால் ஏற்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை ஐந்நூறைக் கடந்து 502 ஆக அதிகரித்துள்ளது.

ஏழ்மையில் வாடும் மக்களுக்காகவே நான் உழைக்கிறேன் – பிரதமர் மோடி

இந்தியாவில் ஏழ்மையில் வாடும் மக்களே தனது நண்பர்கள் எனவும் அவர்களுக்காகவே தான் உழைப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.கொல்கத்தாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது மோடி இவ்வாறு கூறியுள்ளார்.பிரதமர் மோடி, பெரு முதலாளிகளின்...

ஐ.நா. பிரேரணை நகலை ஏற்றது கூட்டமைப்பு

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிராகப் பிரதான நாடுகள் தற்போது முன்வைத்துள்ள – பிரேரித்துள்ள – 46/01 இலக்கப் பிரேரணை வெற்றி பெற அங்கத்துவ நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்று...

Stay Connected

6,584FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

500 ஐ கடந்தது கொரோனா உயிரிழப்பு !

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.இந்நிலையில், இலங்கையில் கொரோனாவினால் ஏற்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை ஐந்நூறைக் கடந்து 502 ஆக அதிகரித்துள்ளது.

ஏழ்மையில் வாடும் மக்களுக்காகவே நான் உழைக்கிறேன் – பிரதமர் மோடி

இந்தியாவில் ஏழ்மையில் வாடும் மக்களே தனது நண்பர்கள் எனவும் அவர்களுக்காகவே தான் உழைப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.கொல்கத்தாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது மோடி இவ்வாறு கூறியுள்ளார்.பிரதமர் மோடி, பெரு முதலாளிகளின்...

ஐ.நா. பிரேரணை நகலை ஏற்றது கூட்டமைப்பு

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிராகப் பிரதான நாடுகள் தற்போது முன்வைத்துள்ள – பிரேரித்துள்ள – 46/01 இலக்கப் பிரேரணை வெற்றி பெற அங்கத்துவ நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்று...

அரசின் கைக்கூலியாம் முன்னணி – மணிவண்ணன்

அரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதாக யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றச்சாட்டியுள்ளார்.இன்றையதினம் யாழ்.மாநகர சபையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி...

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டக் களத்தில் விக்னேஸ்வரன்

பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட போராட்டம் மேலும் வலுப்பெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.நல்லூரில் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டத்தின் 8ஆவது...