இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பு நடவடிக்கை தலைவராக செயற்படுவது அந்த அமைப்பின் புதிய தலைவர் என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் அன்டனியோ குடாரேஷ், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தல் குறித்த புதிய அறிக்கையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பில் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரையான பயங்கரவாதிகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய கிழக்கில் ஈராக் மற்றும் சிரியா நாடுகளை கைப்பற்றி சில காலம் அதிகாரம் செலுத்தி வந்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு கடும் போரில் ஈடுபட்டு வந்தது.
இறுதியில் அந்த அமைப்பு தோற்கடிக்கப்பட்டது. எனினும் அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இலங்கையில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பே பொறுப்பு எனக் கூறப்படுகிறது.