March 9, 2021, 3:14 am

தமிழர்களைத் தவிர இந்தியாவிற்குப் பாதுகாப்பாக எவராலும் இருக்க முடியாது-ஊடக சந்திப்பில் ஸ்.ஸ்ரீதரன்

தமிழர்களைத் தவிர இந்தியாவிற்குப் பாதுகாப்பாக எவராலும் இருக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாதுகாப்பு நண்பனாக இந்தியாவின் எப்பொழுதுமான பாதுகாவலனாக வடக்கு கிழக்கின் தமிழர்களே இருப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “சீனாவின் செயற்பாடுகள் என்பது இந்தியாவிற்கு ஆபத்தானது. இந்தியா இனியும் தமிழர்களை எதிரியாகப் பார்க்காது அவர்களின் நலன்களுக்கு அப்பால் இந்தியாவின் நலன்களையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

இணைந்த வட கிழக்கிலே தமிழர்களுக்கான இழந்துபோன உரிமைகள், சுயாட்சியை வழங்குவதன் மூலம் இந்தியாவிற்கான ஓர் பாதுகாப்பு நண்பனாக இந்தியாவின் எப்பொழுதுமான பாதுகாவலனாக வடக்கு கிழக்கின் தமிழர்களே இருப்பார்கள். தமிழர்களைத் தவிர இந்தியாவிற்கு பாதுகாப்பாக எவராலும் இருக்க முடியாது.

எனவே, இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையிலிருந்து மாறி, சீன அரசாங்கத்தின் ஊடாகவோ அல்லது வெளிநாட்டு அரசாங்கத்தின் ஊடாகவோ இலங்கை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளைில் தமிழர்களுடைய இருப்புக்களையும் பாதுகாத்துக்கொண்டு முயற்சித்தால், அது இந்தியாவிற்கு பெரிய பலத்தைத் தரும்.

எமது ஆதரவு இந்தியாவுக்கு இருக்கும். சீனாவோடு எங்களுக்கு இருக்க முடியாது. அதனால்தான் நாங்கள் அடிவாங்குகின்ற காலத்திலும் சரி, நாங்கள் தோற்றுப் போயுள்ள காலத்திலும் சரி இப்பொழுது நாங்கள் ஏதுமற்ற ஏதிலிகளாக இருக்கின்ற காலங்களில்கூட இந்தியாவின் பக்கம் நிற்கின்றோம்.

இந்தியாவிற்கு எப்பொழுதும் நாங்கள் ஆதரவாக இருக்கின்றோம். நாங்கள் இந்தியாவுடன் சேர்ந்து இயங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம் என்ற செய்தியை நாங்கள் மீண்டும் மீண்டும் குறிப்பிடுகின்றோம். அதற்காக, நாங்கள் என்ன விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கின்றோம்” என்று குறிப்பிட்டார்.

Related Articles

மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த புலனாய்வு அதிகாரி

பிலியந்தலை பாசல் மாவத்தையில் அமைந்துள்ள மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் கண்டி, அலவத்துகொட மாருபனவில் பகுதியில் வசிக்கும் 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.குறித்த...

பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக விற்பனை நடவடிக்கை குறைவடைந்துள்ளதாக கொழும்பு வர்த்தக சங்கம் தெரிவிப்பு

அத்தியாவசிய உள்ளிட்ட பல பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக விற்பனை நடவடிக்கை குறைவடைந்துள்ளதாக கொழும்பு வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.அந்த சங்கத்தின் தலைவர் கே.பழனியாண்டி எமது செய்தி சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.பொருட்களுக்கான விலை அதிகரிப்பால்...

யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்றுறுதி

யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்கு நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியானது.வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 387 பேரின் மாதிரிகள் நேற்றைய தினம்...

Stay Connected

6,584FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

எனக்கு அறிவித்திருந்தால் எப்படியேனும் தாக்குதலை தடுத்திருப்பேன்! – ரணில்

இந்திய புலனாய்வுத் தகவலை எனக்கு அறிவித்திருந்தால் எந்த வழியிலேனும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்திருப்பேன் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,“ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய...

ஐ.நாவிற்கு பறந்த கூட்டமைப்பின் போலி அறிக்கை! அம்பலமாகும் இரகசியம்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரால் ஐ.நாவிற்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் அங்கத்துவ கட்சியைச் சார்ந்த எவரும் கையொப்பமிடவில்லையெனவும், அவை கூட்டமைப்பின் போலி அறிக்கையாகவே கருதப்படுமெனவும் ரெலோ அமைப்பின் ஊடக பேச்சாளரும், முகாமைத்துவ ஆலோசகருமான சுரேன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.ஐ.நாவிற்கு...