கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்திற்காக ஜப்பான் அரசின் நிதியுதவியில் நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரன் மற்றும் ஜப்பான் தூதுவராலய அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் அடிக்கல் நாட்டப்பட்ட விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கட்டிடத் தொகுதி திறப்பு விழா இன்று கிளிநொச்சி பல்கலைகழக விவசாய பீடத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா , அங்கயன் இராமநாதன் தம்பி சிவராம் , காதர் மஸ்தான், டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரர் தயானந்தா , ஈ பி டி பி அமைப்பை சேர்ந்த ஸ்டாலின் , ஈ பி டி பி அமைப்பை சேர்ந்த யோகேஸ்வரி பற்குணராசா , ஈ பி டி பி அமைப்பை சேர்ந்தவரும் நெடுந்தீவு பிரதேசபை தவிசாளர் றெக்சியன் கொலையாளியுமான கமலேந்திரன், ஈ பி டி பி அமைப்பை சேர்ந்த றகீம் என எண்ணற்றவர்கள் விருந்தினர்களாக முன் வரிசைகளில் அமர்ந்து இருக்கிறார்கள்
இவர்களுக்கும் யாழ்ப்பாண பல்கலை கழகத்திற்கும் என்ன சம்பந்தம் ? குறைந்த பட்சம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கட்டிடத் தொகுதிக்காக இவர்கள் எதாவது பங்களித்து இருக்கிறார்களா ?
இவர்களால் யாழ்ப்பாண பல்கலை கழகத்திற்கு எதாவது ஒரு துறையில் பங்களிக்க முடியுமா ? பல்கலை கழகம் ஒன்றின் நோக்கங்களை புரிந்து கொள்ள கூடிய ஆற்றலாவது இவர்களிடம் இருக்கின்றதா ?
இல்லையென்றால் உயர் கல்வி நிறுவனமான யாழ்ப்பாண பல்கலை கழகம் தனது நிகழ்வு ஒன்றுக்கு ராஜபக்சே குடும்ப கூட்டாளிகளை அழைத்து விருது வழங்கி வேண்டிய நிர்ப்பந்தம் எதாவது நிருவாகத்திற்கு இருக்கிறதா ?
உயர் கல்வி நிறுவனமான யாழ்ப்பாண பல்கலை கழகம் பிரதித்துவம் செய்யும் தமிழ் மக்களை இலங்கை இராணுவம் சகிதம் வேட்டையாடிய கொலை குற்றவாளிகளை விருந்தினர்களாக அழைத்து விழா நடத்துவதன் மூலம் பல்கலை கழக நிருவாகம் தமிழ் மக்களுக்கு சொல்ல வரும் செய்தி என்ன ?
யாழ்ப்பாண பல்கலை கழகம் அழைத்து முன் வரிசைகளில் இருத்தி வைத்து அழகு பார்த்த மேற்குறிப்பிட்டவர்களில் பெருமளவானவர்கள் மழைக்கு கூட பாடசாலை பக்கம் ஒதுக்கினவர்கள் கிடையாது
அவ்வாறானவர்களை முன் வரிசைகளில் இருந்த்து அழகு பார்ப்பதன் மூலம் ஒரு பல்கலை கழகம் எதை சாதிக்க நினைக்கிறது ?
இது தவிர அறிவியல் நகர் பிரதேசத்தை இராணுவத்திடம் இருந்து பெற்றுத் தருமாறு மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த வேண்டுகோள் காரணமாகவே மஹிந்த ராஜபக்சே அவர்களினால் அறிவியல் நகர் பிரதேசம் விடுவிக்கப்பட்டதாக பேராசிரியர் ஸ்ரீசற்குணராசா அவர்கள் புது கதை சொல்லி இருக்கிறார்.
கடந்த காலங்களில் ஈ பி டி பி அமைப்பில் இருந்த சந்திரகுமார் அவர்கள் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் விடுத்த கோரிக்கையின் பேரில் தான் அறிவியல் நகர் பிரதேசம் விடுவிக்கப்பட்டதாக கதை சொல்லப்பட்டு வந்தது.
பேராசிரியர் ஸ்ரீசற்குணராசா அவர்களே , டக்ளஸ் தேவானந்தா சொல்லி கேட்கும் நிலையில் ராஜபக்சே குடும்பம் இருந்தது என உண்மையில் நம்புகிறீர்களா ? இல்லையென்றால் பதவியை தக்க வைக்க பொய் சொல்லுகிறீர்களா ?
பதவிகளுக்காக நீங்கள் சொல்லும் பொய்கள், பொறியியல் மற்றும் விவசாய பீடங்களுக்காக நேர்மையாக உழைத்த பேராசிரியர் துரைராஜா போன்ற எண்ணற்ற கல்விமான்களின் பங்களிப்பை கொச்சைப்படுத்தும் என்பதை மறந்து விடாதீர்கள்



