யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 15 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (ஜன-31) யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட 245 பேரின் பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டம் – 01
மன்னார் மாவட்டம் – 02 பேர் என வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன்,
வெள்ளாங்குளம் தனிமைப்படுத்தல் மையம் – 10 பேர்,
ஜம்பகோளப்பட்டினம் தனிமைப்படுத்தல் மையம் – ஒருவர்,
கோப்பாய் சிகிச்சை நிலையம் – ஒருவர்
என 12 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.