வலிமேற்கு பிரதேசத்தில் இராணுவத்தினரால் தமக்கு காணியினை பாராதீனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்.வலிமேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதே நாடாளுமன்ற உறுப்பினரால் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்ததாவது வடக்கு மாகாணம் முழுவதும் காணிகளை இராணுவம் கடற்படை விமானப்படை போன்றவை ஏற்கனவே கபளீகரம் செய்து வைத்திருக்கிறது. முப்படையினருக்கு எவ்வித காணிகளையும் வழங்க அனுமதிக்க வேண்டாம் என்று விடாப்பிடியாக இருந்ததைத் தொடர்ந்து அந்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது