முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தா தேசிய பாடசாலையின் மைதானத்தில் புதைக்கப்பட்டிருந்த பெருமளவான ஆட்லறி செல்கள் இன்று (28) அகழ்ந்து எடுக்கப்பட்டன.
கடந்த 25ஆம் திகதி மைதான துப்பரவு பணி மேற்கொள்ளப்பட்ட போது, வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.
அதை தொடர்ந்து நீதிமன்ற அனுமதியுடன் அங்கு இன்று அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது, நூற்றுக்கணக்கான எறிகணைகள் மீட்கப்பட்டன.
அவை யாரால் புதைக்கப்பட்டன என்பது பற்றி இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.


அகழ்வு பணி நடக்கும் இடத்திற்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.