யுத்தத்தில் இழைக்கப்பட்ட கொடுமைகளிற்கு பரிகாரம் தேடி தமிழனமே ஒரே குரலில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நீதி கேட்டுள்ள நிலையில், படைத்தரப்பின் ஏற்பாட்டில் யாழ் நகரில் இன்று சிலர் கோசமெழுப்பினர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர் தமிழ் பேச முடியாமலிருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஐ.நா மனித உரிமைகள் விவகாரத்தில் தமிழ் கட்சிகள் பக்கசார்பாக செயற்பட்டு வருவதாகவும், ஜெனிவாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஆயுதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட கடத்தல் கொலை விடயங்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் எனவும் அந்த கும்பல் கூக்குரலிட்டது.


கடந்த தேர்தலில் அங்கஜன் தரப்புடன் தேர்தலில் போட்டியிட்ட ஒருவர் இந்த நடவடிக்கையில் முன்னிலை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்