March 2, 2021, 4:19 pm

அரசியல் கைதியின் உணவு தவிர்ப்பு போராட்டம் 3 வாரங்களுக்கு தள்ளிவைப்பு!

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கடந்த 10 நாட்களாக ஈடுபட்டிருந்த அரசியல் கைதியான தேவதாசன், சிறைச்சாலை அத்தியட்சகரின் உறுதிமொழியை அடுத்து போராட்டத்தை இடை நிறுத்தியுள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) வரை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவர், 3 வாரங்களுக்கு இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேன்முறையீட்டு வழக்குகள் இரண்டும் துரித விசாரணைக்கு உட்படுத்தப்படாதுவிடின் பிணை அனுமதி வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்

மேன்முறையீட்டு வழக்குகளில் துரித விசாரணை சாத்தியமில்லையாயின், பிணை அனுமதி பெற ஆவண செய்து தருமாறு கோரி புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதியான இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர் கனகசபை தேவதாசன் (வயது 64) கடந்த 06.01.2021 முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

அவருடைய உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் நேற்று முற்பகல் 10 மணிக்கு, சிறை அத்தியட்சகர் மற்றும் உதவி அத்தியட்சகருக்கும் தேவதாசனுக்கும் இடையில் மொழிபெயர்ப்பு உதவியுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது.

அதன்போது சில முடிவுகள் எட்டப்பட்டது. அதாவது ஏற்கனவே இந்த விடயமாக மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் தொடர்ச்சியாக நாளை, மேன்முறையீட்டு மன்றுக்கு நேரடியாகச் சென்று தேவதாசனின் கோரிக்கை மீதான உரிய நடவடிக்கையை உடனே எடுக்குமாறு கேட்பதாகவும் மன்று இதற்கு தாமதம் செய்யுமாயின் அடுத்துவரும் 3 வாரங்களுக்கு சட்டமா அதிபர் அலுவலகத்துடன் தொடர்புகொண்டு அவருடைய கோரிக்கை மீதான உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்பதாகவும் இதனை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு தெரிவிக்கவுள்ளதாகவும் இவை எதுவும் நடைபெறவில்லையெனில் உண்ணாவிரதத்தை மீண்டும் தொடருவது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சிறை அத்தியட்சகர் உறுதியளித்ததன் காரணமாக அதை ஏற்று, நேற்று முதல் தனது உணவு தவிர்ப்பு போராட்டத்தை 3 வாரங்களுக்கு அவர் இடைநிறுத்தியுள்ளதாக தேவதாசனின் உறவுகள் குரலற்றவர்களின் குரல் அமைப்புக்கு தெரிவித்துள்ளனர்.

Related Articles

இரணைதீவு மக்கள் நாளை போராட்டம்!

கோவிட் வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் சடலங்களை கிளிநொச்சி - இரணைதீவில் அடக்கம் செய்யும் அரசின் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணைதீவுப் பகுதி மக்கள் நாளை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர் என்று இரணைதீவு...

ஜெனிவாவில் இலங்கைக்கு மோசமான நிலை: இந்தியாவிடம் கெஹெலிய அவசர கோரிக்கை

ஜெனிவா தொடரில் இலங்கைக்கு எதிரான அநீதியில் இந்தியா பங்காளியாகக் கூடாது. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையானது முற்றிலுமே ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும். இதனை பொய்மையின் உச்சகட்ட நிலைமையாகவே இலங்கை கருதுகின்றது. எனவே தான் நட்பு...

இப்போதைக்கு எந்தத் தேர்தலும் கிடையாது

இலங்கை இன்னமும் கோவிட் வைரஸின் தாக்கத்தை எதிர்கொண்டு வருகின்றது. இந்தநிலையில், நாட்டில் இப்போதைக்கு எந்தத் தேர்தலையும் நடத்தும் உத்தேசம் அரசுக்கு அறவே இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.மாகாண சபைகளுக்கான...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

இரணைதீவு மக்கள் நாளை போராட்டம்!

கோவிட் வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் சடலங்களை கிளிநொச்சி - இரணைதீவில் அடக்கம் செய்யும் அரசின் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணைதீவுப் பகுதி மக்கள் நாளை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர் என்று இரணைதீவு...

ஜெனிவாவில் இலங்கைக்கு மோசமான நிலை: இந்தியாவிடம் கெஹெலிய அவசர கோரிக்கை

ஜெனிவா தொடரில் இலங்கைக்கு எதிரான அநீதியில் இந்தியா பங்காளியாகக் கூடாது. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையானது முற்றிலுமே ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும். இதனை பொய்மையின் உச்சகட்ட நிலைமையாகவே இலங்கை கருதுகின்றது. எனவே தான் நட்பு...

இப்போதைக்கு எந்தத் தேர்தலும் கிடையாது

இலங்கை இன்னமும் கோவிட் வைரஸின் தாக்கத்தை எதிர்கொண்டு வருகின்றது. இந்தநிலையில், நாட்டில் இப்போதைக்கு எந்தத் தேர்தலையும் நடத்தும் உத்தேசம் அரசுக்கு அறவே இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.மாகாண சபைகளுக்கான...

வவுனியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் ; திலீபன் தலைமையில்

2021ஆம் ஆண்டிற்கான வவுனியா பிரதேச செயலகத்தின் முதலாவது அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று (02) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் கு.திலீபனின் தலைமையில் பிரதேச செயலாளரின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற...

யாழ் மேயரை சந்தித்த பிரான்ஸ் தூதரக ஓர் அதிகாரி

இலங்கைக்கான பிரான்ஸ் தூதரக அதிகாரி யாழ் மாநகர சபை முதல்வரை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இந்த சந்திப்பு இன்று பிற்பகல் யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது.இலங்கைக்கான பிரான்ஸ் தூதரக அதிகாரி வேர்னால்ட் லேலார்ஜ் (...