March 7, 2021, 5:17 pm

ஆண்டு ஆறுக்கு மாணவர்களை இணைப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியாகியது!

கடந்த ஆண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தரம் ஆறு கற்பதற்காக முன்னணிப் பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒக்டோபர் 11 ஆம் திகதி இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சைகள் 2,936 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றிருந்தது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு 331,741 மாணவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பிருந்த நிலையில், 326,264 பேர் அதற்காக தோற்றியிருந்ததாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் தரம் ஆறு மாணவர்களை பிரபல பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

அவற்றின் விபரம் வருமாறு,

ஆண்கள் பாடசாலை – வெட்டுப் புள்ளிகள்

கொழும்பு ரோயல் கல்லூரி – 187

டி.எஸ் சேனாநாயக்க கல்லூரி, கொழும்பு 07 – 179

பருத்தித்துறை ஹாட்லி கல்லுரி – 178

இசிபத்தான கல்லூரி, கொழும்பு 05 – 174

யாழ். இந்துக் கல்லூரி – 166

யாழ். மத்திய கல்லூரி – 161

மட்டக்களப்பு மெதடிஸ்ட் மத்திய கல்லூரி – 160

ஓட்டமாவடி மத்திய கல்லூரி – 160

சாய்ந்தமருது சாஹிரா கல்லூரி – 160

திருகோணமலை கோணேஸ்வரா இந்து கல்லூரி -159

புத்தளம் ஷாஹிரா தேசிய கல்லூரி – 157

பெண்கள் பாடசாலை – வெட்டுப் புள்ளிகள்

பம்பலப்பிட்டி, முஸ்லிம் மகளிர் கல்லூரி – 181

பருத்தித்துறை, மெதடிஸ்ட் பெண்கள் உயர்தர பாடசாலை – 174

யாழ்ப்பாணம், வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை – 173 கல்முனை, மஹ்மூத் பாலிகா கல்லூரி – 170

யாழ். ஹிந்து மகளிர் கல்லூரி – 169

வின்சென்ட் பெண்கள் உயர்தர பாடசாலை, மட்டக்களப்பு – 169

கண்டி, பதியுத்தீன் மஹ்மூத் பாலிகா வித்தியாலயம் – 166

ஹட்டன், புனித கெப்ரியல் பெண்கள் கல்லூரி, – 166

பம்பலப்பிட்டி, இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி – 163

திருகோணமலை, ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி – 160

கலவன் பாடசாலை – வெட்டுப் புள்ளிகள்

ஹட்டன், ஹைலண்ட்ஸ் கல்லூரி – 181

மூதுர், மத்திய கல்லூரி – 171

கொட்டகலை, கேம்பிரிட்ஜ் கல்லூரி – 168

கொக்குவில், கொக்குவில் இந்து கல்லூரி – 167

ஹப்புகஸ்தலாவ, அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலை – 166

சம்மாந்துறை, முஸ்லிம் மத்திய கல்லூரி – 165

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி – 165

கெக்குணுகொல்ல தேசிய பாடசாலை – 164

மாவலனல்லை, சாஹிரா முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் – 164

கல்முனை, கார்மெல் பற்றிமா கல்லூரி – 164

ஹாலி எல, ஊவா விஞ்ஞான கல்லூரி – 164

விஷ்வமடு மகா வித்தியாலயம் – 164

கரவெட்டி, நெல்லியடி மத்திய கல்லூரி – 163

கம்பளை, ஷாஹிரா கல்லுரி – 162

கொழும்பு 12, விவேகானந்தா கல்லூரி – 162

மாவனல்லை, பதுரியா மகா வித்தியாலயம் – 162

அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி – 162

மஸ்கெலியா, புனித ஜோசப் தமிழ் வித்தியாலயம் – 161

அட்டாளைச்சேனை, மத்திய கல்லூரி – 161

கொட்டகலை, தமிழ் மகா வித்தியாலயம் – 161

Related Articles

500 ஐ கடந்தது கொரோனா உயிரிழப்பு !

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.இந்நிலையில், இலங்கையில் கொரோனாவினால் ஏற்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை ஐந்நூறைக் கடந்து 502 ஆக அதிகரித்துள்ளது.

ஏழ்மையில் வாடும் மக்களுக்காகவே நான் உழைக்கிறேன் – பிரதமர் மோடி

இந்தியாவில் ஏழ்மையில் வாடும் மக்களே தனது நண்பர்கள் எனவும் அவர்களுக்காகவே தான் உழைப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.கொல்கத்தாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது மோடி இவ்வாறு கூறியுள்ளார்.பிரதமர் மோடி, பெரு முதலாளிகளின்...

ஐ.நா. பிரேரணை நகலை ஏற்றது கூட்டமைப்பு

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிராகப் பிரதான நாடுகள் தற்போது முன்வைத்துள்ள – பிரேரித்துள்ள – 46/01 இலக்கப் பிரேரணை வெற்றி பெற அங்கத்துவ நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்று...

Stay Connected

6,584FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

500 ஐ கடந்தது கொரோனா உயிரிழப்பு !

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.இந்நிலையில், இலங்கையில் கொரோனாவினால் ஏற்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை ஐந்நூறைக் கடந்து 502 ஆக அதிகரித்துள்ளது.

ஏழ்மையில் வாடும் மக்களுக்காகவே நான் உழைக்கிறேன் – பிரதமர் மோடி

இந்தியாவில் ஏழ்மையில் வாடும் மக்களே தனது நண்பர்கள் எனவும் அவர்களுக்காகவே தான் உழைப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.கொல்கத்தாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது மோடி இவ்வாறு கூறியுள்ளார்.பிரதமர் மோடி, பெரு முதலாளிகளின்...

ஐ.நா. பிரேரணை நகலை ஏற்றது கூட்டமைப்பு

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிராகப் பிரதான நாடுகள் தற்போது முன்வைத்துள்ள – பிரேரித்துள்ள – 46/01 இலக்கப் பிரேரணை வெற்றி பெற அங்கத்துவ நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்று...

அரசின் கைக்கூலியாம் முன்னணி – மணிவண்ணன்

அரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதாக யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றச்சாட்டியுள்ளார்.இன்றையதினம் யாழ்.மாநகர சபையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி...

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டக் களத்தில் விக்னேஸ்வரன்

பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட போராட்டம் மேலும் வலுப்பெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.நல்லூரில் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டத்தின் 8ஆவது...