March 3, 2021, 8:52 pm

அரச ஊடகத்தின் அதர்மத் தலைப்பு-“பயங்கரவாதிகளாகச் சென்ற யாழ் இளைஞர்கள் அதிரடிப்படை முன் மண்டியிட்டனர்”-

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழித்தொழிக்கப்படுவதைக் கேள்விப்பட்டு அங்கு சென்ற இளைஞர்கள் அங்கு குவிக்கப்பட்ட அதிரடிப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் முன்னர் அமைதியான முறையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

வெறுங்கையோடு அங்கு அமர்ந்திருந்து எதிர்ப்புத்தெரிவித்த இளைஞர்களுக்கு முன்னர் ஆயுதம் தரித்த அதிரடிப்படையினர் உட்பட பாதுகாப்பு தரப்பினர் நிற்கும் புகைப்படங்கள் பரவலாக வெளியாகியிருந்தன.

அத்தோடு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

இந்தநிலையில் அரச தொலைக்காட்சியான ITN( சுயாதீன தொலைக்காட்சி_) அதன் இணையத்தளத்தில்இன்று யாழ் பதற்றம் தொடர்பாக பிரசுரித்திருந்த இனவாத ரீதியான கட்டுரைக்கு ‘ பயங்கரவாதிகளாகச் சென்ற யாழ் இளைஞர்கள் அதிரடிப்படையினர் முன்னர் மண்டியிட்டனர்’ எனக் குரோதமான தலைப்பை இட்டுள்ளனர்.

மேலும் இதுதொடர்பாக இலங்கையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் ரோவர் இணைய செய்தி நிறுவனத்தின் பிரதம ஆசிரியர் ரொயல் ரேமண்ட ஆகியோர் ஏற்கனவே தமது வன்மையான கண்டனங்களைப்பதிவு செய்துள்ளதுடன் ஊடக தர்மத்திற்கு முற்றிலும் விரோதமாக செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழித்தொழிக்கப்பட்டமைக்கு வன்மையான கண்டனங்கள் வெளியாகியவண்ணமுள்ளன.

இந்நிலையில் குறித்த சம்பவத்திற்கு இலங்கையிலுள்ள அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் மு.க,ஸ்ராலின் போன்ற தமிழக அரசியல் தலைவர்கள் தமது கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.நாடு கடந்த பல அரசாங்கங்கள் இதற்கு தங்கள் சார்பாக பல கண்டணங்களை தெரிவித்த வண்ணமே காணப்படுகின்றமை குறிப்பித்தக்கது.

Related Articles

தமிழ்நாட்டு அரசியலில் திடீர் திருப்பம்!! அரசியலில் இருந்து விலகினார் சசிகலா

நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பேன் என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சித் தொடர தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து...

தற்கொலை செய்து கொண்ட பிரபல செய்தி வாசிப்பாளர் !

தமிழ் சினிமா திரையுலகில் பல பிரபலங்கள் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர்.அந்த வரிசையில் தற்போது மாலைமுரசு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் கோபிநாத் அவர்களும் இணைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்த, வரிசையில்...

ஆப்கானில் ஊடக ஊழியர்கள் சுட்டுக் கொலை !

கிழக்கு ஆப்கானிஸ்தான் நகரமான ஜலாலாபாத்தில் நேற்று மூன்று பெண் ஊடக ஊழியர்கள் பணியினை முடித்துவிட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.உயிரிழந்த பெண்கள் தமது ஊழியர்கள் என உள்ளூர் ஒளிபரப்பாளர் எனிகாஸ்...

Stay Connected

6,571FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

தமிழ்நாட்டு அரசியலில் திடீர் திருப்பம்!! அரசியலில் இருந்து விலகினார் சசிகலா

நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பேன் என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சித் தொடர தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து...

தற்கொலை செய்து கொண்ட பிரபல செய்தி வாசிப்பாளர் !

தமிழ் சினிமா திரையுலகில் பல பிரபலங்கள் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர்.அந்த வரிசையில் தற்போது மாலைமுரசு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் கோபிநாத் அவர்களும் இணைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்த, வரிசையில்...

ஆப்கானில் ஊடக ஊழியர்கள் சுட்டுக் கொலை !

கிழக்கு ஆப்கானிஸ்தான் நகரமான ஜலாலாபாத்தில் நேற்று மூன்று பெண் ஊடக ஊழியர்கள் பணியினை முடித்துவிட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.உயிரிழந்த பெண்கள் தமது ஊழியர்கள் என உள்ளூர் ஒளிபரப்பாளர் எனிகாஸ்...

பரீட்சை நிலையங்களுக்கு அருகில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்போரை கைது செய்ய நடவடிக்கை

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை இடம்பெறும் பரீட்சை மண்டபங்களுக்கு அருகில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி துண்டு பிரசுரங்களை விநியோகிப்பவர்களை கைது செய்வதற்கான விஷேட சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறை...

மூன்று பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய் – கிளிநொச்சியில் பரிதாபம்

தனது 2, 5 மற்றும் 8 வயதுடைய பிள்ளைகளுடனேயே குறித்த தாய் கிணற்றில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.https://youtu.be/e8HwlFygWekதாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதேவேளை இரண்டு வயதுப் பிள்ளையின் சடலத்தை மாத்திரம் மீட்டுள்ளதாக எமது செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.கிளிநொச்சி...