மெய்நிகர் தொழில்நுட்பம், கொரோனாவுக்கு பிறகு இயங்கும் நிஜமான தொழில்நுட்பமாக மாறிவிட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி ஐஐடியின் 51ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று காணொளி மூலம் பேசிய மோடி, ஆத்மநிர்பர் திட்டத்தை ஐஐடி மாணவர்கள் வலுப்படுத்தியுள்ளதாகக் கூறினார். விவசாயத்துறையில் புதிய தொழிற்நுட்பக் கண்டுபிடிப்புகள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதன்முறையாக உருவாகியுள்ளதாகவும், வீட்டிலிருந்து பணியாற்றும் வசதியில் இருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளதால் ஐடி துறை உலகளவில் போட்டிபோட முடிகிறது என்றும் தெரிவித்தார்.
ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புகளை அதிகளவிலான மக்களுக்கு உதவும் வகையில் தயாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், மாணவர்கள் தனித்துவமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.