January 24, 2021, 12:28 pm

மலையக மக்கள் இப்படியும் பாதிப்பு! எதிர்த்துத் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வகந்த தோட்ட தேயிலை மலைக்கு குப்பைக் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத் தொழிலாளர்கள் இன்று காலை ஹட்டன்- பொகவந்தலாவ பிரதான விதியில் சிறிபுர பிரதேசத்திற்கு திரும்பும் சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொகவந்தலாவ பிரதான வீதிக்கு கீழ் பகுதியில் அமைந்து குறித்த தேயிலை மலைக்கு பொகவந்தலாவ சிறிபுர பகுதியில் வசிக்கும் மக்கள் நாள் தோறும் தங்கள் வீடுகளில் சேரும் கழிவு பொருட்களை ஈவு இரக்கமின்றி தேயிலை மலைகளில் வீசி விட்டு சென்று விடுவதாகவும் இந்த கழிவு பொருட்களில் கண்ணாடி துண்டுகள் பெம்பஸ் உள்ளிட்ட பொருட்கள் காணப்படுவதாகவும் சில இடங்களில் மாணிக்கல் அகழப்பட்ட பாரிய குழிகள் காணப்படுவதாகவும் இதனால் தங்களது தொழிலினை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தேனீர் இடைவேளைகளின் போது நிம்மதியாக தேனீர் கூட அருந்த முடியாத நிலை காணப்படுவதாகவும் இது குறித்து உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்ட இடத்திற்கு நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் மற்றும் சுற்றாடல் தொடர்பாக கடமை புரியும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் போது ஆர்ப்பாட்ட காரர்களுக்கும் தலைவருக்குமிடையில் காரசாரமான வாக்கு வாதங்கள் இடம்பெற்றன.

தொழிலாளர்கள் தேயிலை மலைக்கு குப்பை போடுவதனை நிறுத்த வேண்டும் என்று பொலிஸாரிடமும் தலைவரிமும் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து சிறிபுர பகுதியில் குப்பை கொட்டுபவர்களை கண்காணிக்க சி.சி.டி.வி கமாரா பொருத்தப்பட்டு கவனிப்பதாகவும் அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை கட்சி பேதமின்றி எடுப்பதாக தெரிவித்தனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

Related Articles

ஜனாதிபதி ஆணைக்குழு கண்துடைப்பு நடவடிக்கையே! – மனோ விமர்சனம்!

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எதிர்வரும் மார்ச் மாதம் கொண்டு வரவுள்ள பிரேரணையைச் சமாளிக்கும் வகையில், கண்துடைப்புக்காகவே புதிய ஆணைக்குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார்."- இவ்வாறு தமிழ் முற்போக்குக்...

சர்தேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை, பயணத் தடை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பரிந்துரை????

இலங்கையை சர்சதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) நிறுத்தி விசாரணைகளை முன்னெடுப்பதற்கான பரிந்துரைகளை தனது சமீபத்திய அறிக்கையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.மேலும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆராயவும் அது...

கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் போதைப்பொருள் நிரப்பப்பட்ட டென்னிஸ் பந்துகள் இரண்டு கண்டுபிடிப்பு!

வெலிகந்த - கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் நேற்று இரவு வெளிப்புறத்திலிருந்து எறியப்பட்ட போதைப்பொருள் நிரப்பிய டென்னிஸ் பந்துகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.தனி நபரொருவரால் அல்லது குழுவொன்றினால் குறித்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று...

Stay Connected

6,383FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

கல்வியமைச்சிடம் இருந்து மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்..!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் நாளை முதல் மேல்மாகாணத்திலுள்ள பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.கல்வியமைச்சு இதனை தெரிவித்துள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் கொவிட்-19 பரவலுடன் மேல்மாகாணத்திலுள்ள அனைத்து...

கொழும்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் கொரோனா அதிகரிப்பு…!

நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 724 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 197 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம்...