குப்பைமேனி ஒரு மருத்துவ மூலிகை செடி . இது இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அதிகளவில் காணப்படுகிறது. இது பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
தலைபாரத்துக்கு குப்பைமேனி இலையை அரைத்து, நெற்றியில் பற்றுபோடலாம். உடல் முழுவதும் வலி ஏற்பட்டு அவதிப்படுபவர்களுக்கு குப்பைமேனி இலைச் சாற்றை, நல்லெண்ணெய்யுடன் சேர்த்துக் காய்ச்சிப் பயன்படுத்தலாம்.
மூட்டு வலிக்கு குப்பைமேனி இலையை சாறு பிழிந்து நல்லெண்ணெய்யுடன் காய்ச்சி தேய்த்து வர மூட்டு வலி குணமாகும். மூல நோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையை துவையலாக செய்து சாப்பிட்டுவர குணமாகும்.
குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும்.குப்பைமேனி இலையை நிழலில் காயவைத்து உலர்த்தி இடித்துப் பொடியாக்கி கஷாயம் செய்து சாப்பிட தலைவலி நீங்கும்.இந்த இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.
கொசுக்கடி அல்லது அலர்ஜி காரணமாக தோலில் ஏற்படும் தடிப்புக்கும், குப்பைமேனியின் இலைச் சாற்றை, தேங்காய் எண்ணெயில் சேர்த்துக் கொதிக்கவைத்துத் தடவலாம்.