March 7, 2021, 5:28 pm

சிவப்பு அரிசியை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா? தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும்!

சிவப்பு அரிசி ஊட்டச்சத்தும் அதிக சத்தும் நிறைந்தது என்பதோடு பாரம்பரியமான உணவும் கூட. இது வலுவானது.மற்ற அரிசி ரகங்களை காட்டிலும் சத்து கொண்டது.நமது பாரம்பரிய அரிசி வகையில் சிவப்பு அரிசி முக்கியமானது இன்று பளபளக்கும் பாலீஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியில் மயங்கி இருக்கும் நாம் நம் பாரம்பரிய அரிசியான சிவப்பு அரிசியை பெருமளவு பயன்படுத்துவதில்லை. சிவப்பு அரிசி தரும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது

பொதுவாக சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவை சாப்பிடவே கூடாது என்று சொல்வார்கள். ஆனால் சர்க்கரை நோயாளிகள் சிவப்பு அரிசியை எடுத்துகொள்ளலாம். இது உடலில் இருக்கும் நொதிகளுடன் இணைந்து செயலாற்றுகிறது. அதில் ஒன்று குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் சுரப்பு. இதில் இருக்கும் மெக்னீசியம் ஆனது இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது.சிவப்பு அரிசி சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு அபாயத்தை குறைக்க செய்கிறது. இதிலிருக்கும் குறைந்த கிளைசெமின் குறியீடு சர்க்கரை அளவை கட்டுப்படுத்த செய்வதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை செய்யகூடியது.

எடை இழப்புக்கு உதவும்

சிவப்பு அரிசி எடை இழப்பை ஊக்குவிக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில் உள்ள கொழுப்பு பூஜ்ஜியம் அளவு என்பதால் இதன் நுகர்வு உடலில் எடையை அதிகரிக்க செய்யாது. அரிசியின் வெளிப்புற அடுக்கு அப்படியே வைக்கப்படுவதால் இது நார்ச்சத்தின் கரையக்கூடிய மற்றும் கரையாத இரண்டையும் கொண்டுள்ளது. உடலில் சேரும் உயர் கொழுப்புகளை கட்டுப்படுத்த அதிலிருந்து விடுபட சிவப்பு அரிசியை பயன்படுத்துவது நல்லது.

செரிமானத்தை மேம்படுத்தும்

அன்றாடம் உடல் வேலை செய்ய தேவையான ஆற்றலை இது வழங்குகிறது. இது நார்ச்சத்து கொண்டிருப்பதால் மலச்சிக்கல் இல்லாமல் வைத்துகொள்ளும். இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பொருள்களாக உடலில் சென்று சேமிக்கப்படுகிறது. சிவப்பு அரிசி செரிமானத்தன்மையை மேம்படுத்தகூடியது இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி குடல் இயக்கங்களை எளிதாக்குகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.

இதயத்துக்கு நன்மை செய்கிறது

மற்ற அரிசியில் இல்லாத அளவுக்கு இதில் வைட்டமின் பி 1, பி3 பி6, இரும்புச்சத்து மெக்னீசியம், துத்தநாகம், மாங்கனீசு, செலினியம், பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் மிகுதியாகவே நிறைந்துள்ளது. இதில் இருக்கும் ஆன் டி ஆக்ஸிடண்ட் இதயத்துக்கு நன்மை செய்யகூடியது.இதில் இருக்கும் வைட்டமின் இ உடலில் ஆற்றல் கொண்ட ஆன் டி ஆக்ஸிடண்ட் உடன் இணைந்து செயல்படும் போது அது இதய நோய்கள் வராமல் இதயத்துக்கு பாதுகாப்பு அளிக்கிறது.

சருமத்துக்கு நன்மை பயக்கிறது

சிவப்பு அரிசி உடல் ஆரோக்கியம் போன்று சருமத்துக்கும் அதிக நன்மைகளை செய்கிறது. இது சரும ஆரோக்கியத்துக்கு முக்கியமானதாக சொல்லப்படுகிறது. சிவப்பு அரிசியில் உள்ள ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்கலை எதிர்த்து போராட செய்கிறது. இதனால் சருமம் வயதான தோற்றத்தை தள்ளிப்போக்க செய்கிறது. மேலும் சரும சுருக்கம் மற்றும் புற ஊதா கதிர்களின் தாக்கத்தால் உண்டாகும் பாதிப்பை குறைக்கும்.

பொதுவாக நெல்லில் வெளியே இருப்பது உமி, உள்ளே இருப்பது தவிடு, அதனுள் கரு, கடைசியாகத்தான் மாவுப்பொருள் என நான்கு பகுதிகள் இருக்கும். நாம் மூன்றையும் வெளியேற்றி சத்தில்லாத மாவுப்பொருளை தான் எடுத்துகொள்கிறோம். ஆனால் சிவப்பு அரிசியில் சத்துக்கள் அனைத்தும் மாவுச்சத்தில் சென்று சேர்க்கப்படுவதால் இதை தீட்டிய பிறகும் நாம் சத்தை பெற்றுவிட முடியும்.

Related Articles

500 ஐ கடந்தது கொரோனா உயிரிழப்பு !

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.இந்நிலையில், இலங்கையில் கொரோனாவினால் ஏற்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை ஐந்நூறைக் கடந்து 502 ஆக அதிகரித்துள்ளது.

ஏழ்மையில் வாடும் மக்களுக்காகவே நான் உழைக்கிறேன் – பிரதமர் மோடி

இந்தியாவில் ஏழ்மையில் வாடும் மக்களே தனது நண்பர்கள் எனவும் அவர்களுக்காகவே தான் உழைப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.கொல்கத்தாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது மோடி இவ்வாறு கூறியுள்ளார்.பிரதமர் மோடி, பெரு முதலாளிகளின்...

ஐ.நா. பிரேரணை நகலை ஏற்றது கூட்டமைப்பு

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிராகப் பிரதான நாடுகள் தற்போது முன்வைத்துள்ள – பிரேரித்துள்ள – 46/01 இலக்கப் பிரேரணை வெற்றி பெற அங்கத்துவ நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்று...

Stay Connected

6,584FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

500 ஐ கடந்தது கொரோனா உயிரிழப்பு !

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.இந்நிலையில், இலங்கையில் கொரோனாவினால் ஏற்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை ஐந்நூறைக் கடந்து 502 ஆக அதிகரித்துள்ளது.

ஏழ்மையில் வாடும் மக்களுக்காகவே நான் உழைக்கிறேன் – பிரதமர் மோடி

இந்தியாவில் ஏழ்மையில் வாடும் மக்களே தனது நண்பர்கள் எனவும் அவர்களுக்காகவே தான் உழைப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.கொல்கத்தாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது மோடி இவ்வாறு கூறியுள்ளார்.பிரதமர் மோடி, பெரு முதலாளிகளின்...

ஐ.நா. பிரேரணை நகலை ஏற்றது கூட்டமைப்பு

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிராகப் பிரதான நாடுகள் தற்போது முன்வைத்துள்ள – பிரேரித்துள்ள – 46/01 இலக்கப் பிரேரணை வெற்றி பெற அங்கத்துவ நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்று...

அரசின் கைக்கூலியாம் முன்னணி – மணிவண்ணன்

அரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதாக யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றச்சாட்டியுள்ளார்.இன்றையதினம் யாழ்.மாநகர சபையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி...

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டக் களத்தில் விக்னேஸ்வரன்

பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட போராட்டம் மேலும் வலுப்பெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.நல்லூரில் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டத்தின் 8ஆவது...