January 20, 2021, 12:23 pm

மட்டக்களப்பு எல்லைக்கிராமத்தில் பண்ணையாளர்கள் ஆறுபேர் கடத்தப்பட்டனர்!

மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவனை எல்லை பகுதியில் 6 பண்ணையாளர்களை இன்று காலை பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடத்திச் சென்று கட்டிவைத்து அடித்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

பின்னர் அவளுடைய அனைத்து தொலைபேசியையும் பறித்து வைத்தவுடன் அவர்களுடைய தொடர்புகள் அனைத்தையும் துண்டித்து அவர்கனை இனம் தெரியாத இடத்திற்கு கடத்திச் சென்றுவிட்டதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது குறித்த இடத்திலிருந்து இனம் தெரியாத இடத்திற்கு 6 கடத்திச் சென்றுள்ளதாக அங்கிருந்த பண்ணையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால் ஒரு பதட்டமான சூழ்நிலை மயிலத்தமடு மற்றும் மாதவணைப் பகுதியில் ஏற்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

கடத்தப்பட்ட 06 பண்ணையாளர்களையும் தேடிச் சென்ற சக பண்ணையாளர்களையும் அத்துமீறி பயிர் செய்கையில் ஈடுபடுபவர்கள் அச்சுறுத்தி துரத்தியதாகவும் அதனால் பண்ணையளர்கள் அச்சத்தில் திரும்பி வந்துள்ளதாக பண்ணையாளர்களின் தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை நேற்றிரவு(8) இனம் தெரியாதவர்கள் பலர் ஆயுதங்களுடன் வந்து பண்ணையாளர்களை அச்சுறுத்தியதாகவும் பண்ணையாளர்களின் குடியிருப்புக்களை சோதனை செய்து ஆயுதங்கள் வைத்து இருக்கிறீர்களா என கேட்டு அச்சுறுத்தியதாக அவ்விடத்தில் இருந்த பண்ணையாளர்களின் தலைவர் தெரிவித்தார்.

சின்னத்தம்பி பாஸ்கரன், முத்துப்பிள்ளை சேந்தன், சுப்பிரமணியம் கோணேசன், பரசுராமன் மேகுலன், கிருபைராசா ருச்சுதன், சண்முகம் டயன்சன் ஆகிய ஆறுபேரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு போடப்பட்டுள்ளது

Related Articles

நெடுந்தீவு கடலில் கடற்படை படகுடன் மோதி மூழ்கிய இந்திய மீனவர்களை தேடும் பணி தீவிரம்!

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து, யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி, இந்திய மீனவப் படகிலிருந்தவர்களை தேடி விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.நேற்று...

கனடாவில் புதிய கோவிட்19 கட்டுப்பாடுகள் எந்நேரமும் நடைமுறைக்கு வரலாம் என எச்சரிக்கை!

பல்வேறு நாடுகளில் கொரோனா புதிய திரிவு வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் கனேடிய மத்திய அரசின் புதிய பயணக் கட்டுப்பாடுகள் முன்னறிவித்தல் இன்றி எந்நேரமும் அமுலாகலாம் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.எனவே,...

குருந்தூர் மலை விவகாரம்! தமிழ் மக்களுக்கு விதுர விக்ரமநாயக்க விடுத்துள்ள செய்தி!

தமிழ் மக்களின் மத மற்றும் கலாச்சார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது என்று தேசிய மரபுரிமைகள், கலைகலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.குருந்தூர் மலை தொல்பொருள்...

Stay Connected

6,361FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

சாம்சுங் நிறுவத்தின் தலைவருக்கு இரண்டரை வருட சிறை!

உலகின் மிகப்பெரிய திறன்பேசி தயாரிப்பு நிறுவனமான சாம்சுங் நிறுவனத்தின் தலைவருக்கு மிகப்பொிய கையூட்டு மோசடிக் குற்றச்சாட்டில் குற்றவாளி என உறுதியானதைத் தொடர்ந்து அவருக்கு இரண்டரை வருடம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டள்ளது.லீ ஜெய்-யோங் சாம்சுங் நிறுவனத்தின் கீழ்...

தமக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்ததாக ட்ரம்ப் தெரிவிப்பு!!!

 தாம் எதைச் செய்வதற்காக தெரிவுசெய்யப்பட்டாரோ அதனை செவ்வனே செய்து முடித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.அத்துடன் மேலும் பல விடயங்களை செய்துள்ளதாகவும் தமது பிரியாவிடை உரையில் அவர் கூறியுள்ளார்.YouTube காணொளியொன்றில், ஜனாதிபதி...