மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன்ட் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேரும்,மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேரும்,களவாஞ்சிக்குடி மற்றும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தலா இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.