January 23, 2021, 5:08 am

மக்கள் பாரிய சவால்களுக்குள்: இராஜாங்க அமைச்சர் விஜாழேந்திரன்

கடுமையான மழை வீழ்ச்சியினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் உட்புகுந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தங்களுக்கு ஒரு சவாலாக இருந்தாலும், இந்த சவாலை எதிர்கொண்டு சமாளிக்கக்கூடிய முன்னாயத்தங்களை மாவட்ட ரீதியாக தாம் முன்னெடுத்து வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் ஏற்பாட்டில் மாவட்ட அரச உயரதிகாரிகளுடன், வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பான கலந்துரையால் நேற்று மாலை மட்டக்களப்பு கச்சேரியில் நடைபெற்றிருந்தது.

இந்த கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் ஏனைய திணைக்கள அதிகாரிகள் அனைவருமே கள ரீதியான செயற்பாடுகளில் இறங்கியிருக்கிறார்கள். அது தொடர்பான கலந்துரையாடல்களையும் நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.

குறிப்பாக கிரான் பிரதேச செயலகப் பிரிவிலே புலிபாய்ந்தகல்லிற்கு பிரதான வீதியில் இருந்து செல்லுகின்ற 5 கிலோமீற்றர் பாதை முழுமையாக நீரிலே மூழ்கி இருக்கிறது.

4 அடி, 5 அடி உயரத்திற்கு நீர் பாய்ந்து செல்கின்றது. தற்பொழுது அனர்த்த முகாமைத்துவ குழுவினுடைய படகு சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு இராணுவம், கடற்படையினர் ஆயத்த நிலையில் இருக்கின்றார்கள். கடற்படையினரால் படகு சேவைகள் ஆயத்த நிலையில் உள்ளன. வெள்ள அபாயம் அதிகமாக காணப்படும் இடங்களுக்கு முன்னறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மழை பெய்யும் பட்சத்தில் மக்களை பாதுகாப்பாக பாடசாலைக்கு கொண்டு வருவதற்கும் மற்றும் பொது கட்டடங்களில் அவர்களை தங்க வைப்பதற்கும் பாடசாலைகளை நாங்கள் ஆயத்த நிலையில் வைத்திருக்கின்றோம்.

எங்களுக்கு மேலும் ஒரு பாரிய சவால் காணப்படுகின்றது. அதாவது covid-19 இனால் சில நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை எவ்வாறு பொது இடங்களில் வைத்துக் கொள்வது என்பது தொடர்பான பிரச்சினை உள்ளது.

எனவே இது தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் வைத்தியர்களுடன் கலந்துரையாட இருக்கின்றோம்.

அத்தோடு அவர்களுக்கு பொது கட்டடத்தில் தனியாக ஒரு இடத்தை ஒதுக்குவது தொடர்பாகவும், அத்தோடு அந்த பகுதியிலே ஏற்படும் வெள்ள அபாயத்தை வைத்தும் அங்கிருந்து இடம்பெயரும் மக்களுடைய எண்ணிக்கையை வைத்து அவர்களை எவ்வாறு தங்க வைப்பது என்பது தொடர்பாக கலந்துரையாட இருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தில் இடம்பெறவிருந்த குடியரசு தின கொண்டாட்டம் இரத்து?

இந்திய மீனவர்களின் உயிரிழப்பின் எதிரொலியாக யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்தில் இடம்பெறவிருந்த குடியரசுத் தின கொண்டாட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறியவருகின்றது.இந்திய மீனவர்கள் பயணித்த படகு கடந்த 18ஆம் திகதி நெடுந்தீவு அருகே இடம்பெற்ற...

மன்னார் மாவட்டத்தில் 2வது கொரோனா மரணம்

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக 2வது நபரும் நேற்று வெள்ளிக்கிழமை (22) உயிரிழந்துள்ள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.மன்னார் மாவட்டத்தில் 2வது கொரோனா மரணமாகவும்...

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா வைரஸ் தொற்று!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிங்கள இணையத்தளமான 'மவ்ரட்ட' செய்தி வெளியிட்டுள்ளது.கேகாலை ஆயுர்வேத மருத்துவரினால் கொரோனாத் தொற்றுக்கான மூலிகை மருந்து எனக்...

Stay Connected

6,380FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தில் இடம்பெறவிருந்த குடியரசு தின கொண்டாட்டம் இரத்து?

இந்திய மீனவர்களின் உயிரிழப்பின் எதிரொலியாக யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்தில் இடம்பெறவிருந்த குடியரசுத் தின கொண்டாட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறியவருகின்றது.இந்திய மீனவர்கள் பயணித்த படகு கடந்த 18ஆம் திகதி நெடுந்தீவு அருகே இடம்பெற்ற...

மன்னார் மாவட்டத்தில் 2வது கொரோனா மரணம்

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக 2வது நபரும் நேற்று வெள்ளிக்கிழமை (22) உயிரிழந்துள்ள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.மன்னார் மாவட்டத்தில் 2வது கொரோனா மரணமாகவும்...

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா வைரஸ் தொற்று!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிங்கள இணையத்தளமான 'மவ்ரட்ட' செய்தி வெளியிட்டுள்ளது.கேகாலை ஆயுர்வேத மருத்துவரினால் கொரோனாத் தொற்றுக்கான மூலிகை மருந்து எனக்...

கொரோனா தொற்றுக்குள்ளான 787 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 787 பேர் நேற்று (22) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,076 இலிருந்து...

இலங்கையில் மேலும் 02 மரணங்கள் பதிவு!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 02 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (22) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 276 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...