January 23, 2021, 4:47 am

மக்களுக்கான முக்கிய அறிவித்தல்!!

கொரோனா தொற்றில் இருந்து உங்களை நீங்கள் பாதுகாக்க வேண்டுமாயின் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அம்பாறை சுகாதார பிராந்தியத்தில் 7 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 47 நபர்களும் திருகோணமலை மாவட்டத்தில் 13 பேரும், கல்முனை சுகாதார பிராந்தியத்தில் 20 பேர் உட்பட 87 பேர் பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நேற்றும் இன்றும் பெற்ற தகவலின் பிரகாரம் ஏறாவூர் பிரதேச செயலக பிரிவில் கொழும்பில் இருந்து 13 நாட்களின் பின் திரும்பியவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் புதிதாக ஒருவரும், செங்கலடியில் வியாபாரம் செய்யும் மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டது.

அதேவேளை கோரளைப்பற்று மத்தியில் வழமையாக பேலியகொட மீன்சந்தை நேரடியாக தொடர்புபட்ட ஒருவருக்கும், கல்முனை சுகாதார பிராந்தியத்தின் கீழ் உள்ள இறக்காமம் பகுதியில் ஏற்கனவே கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட குடும்ப நபர்கள் இருவரும் கொரோனா தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தெய்யத்தகண்டியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டபோதும் அவர் கடந்த 21ம் திகதி தெய்யத்தகண்டிக்கு வந்து சென்றதுடன் அவரை கிழக்கு மாகாணத்தில் இணைத்துள்ளோம். கிழக்கு மாகாணத்தில் 5 வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக மாற்றப்பட்டுள்ளது. இதில் கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டவர்கள் இந்த வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த அடிப்படையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 94 பேரும், ஈச்சலம்பற்று வைத்தியசாலையில் 6 பேரும், கரடியனாறு வைத்தியசாலையில் 71 பேரும், பதியத்தலாவை வைத்தியசாலையில் 20 பேரும், பாலமுனை வைத்தியசாலையில் 70 பேர் உட்பட 261 பேர் தற்போது பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அதேவேளை பேலியகொடை கொரோனா தொற்று வந்ததன் பிற்பாடு 624 பேரை பராமரித்துள்ளோம். அவர்களில் 361 பேர் சுகமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளோம்.

தற்போது நாளுக்கு நாள் ஒன்று இரண்டு என அதிகரித்து செல்கின்றது. அதேநேரம் எங்களால் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு கண்டறியப்பட்டவர்கள் மாத்திரம் அல்ல, இதைவிட பல நபர்களும் காணப்படலாம். எனவே கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைவரிடமும் வேண்டுவது அனைத்து விதமான சுகாதார நடைமுறைகளையும் மிகவும் கட்டுக்கோபான முறையில் கடைப்பிடித்தால் தான் உங்களை இந்த தொற்றில் இருந்து பாதுகாக்கலாம்.

சுகாதார துறையினராலும் பொலிஸ் மற்றும் முப்படையினர் திணைக்களங்களால் எங்களால் இயலுமான சேவைகளை செய்து வருகின்றோம். என்றாலும் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதேவேளை தொற்றுடன் சம்மந்தப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. ஆகவே எங்களால் அனைவரையும் கண்காணிக்க முடியாது. எனவே இயன்றளவுக்கு வெளியே செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்றார்.

Related Articles

இந்தியத் துணைத் தூதரகத்தில் இடம்பெறவிருந்த குடியரசுத் தின கொண்டாட்டம் இரத்து?

இந்திய மீனவர்களின் உயிரிழப்பின் எதிரொலியாக யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்தில் இடம்பெறவிருந்த குடியரசுத் தின கொண்டாட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறியவருகின்றது.இந்திய மீனவர்கள் பயணித்த படகு கடந்த 18ஆம் திகதி நெடுந்தீவு அருகே இடம்பெற்ற...

மன்னார் மாவட்டத்தில் 2வது கொரோனா மரணம்

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக 2வது நபரும் நேற்று வெள்ளிக்கிழமை (22) உயிரிழந்துள்ள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.மன்னார் மாவட்டத்தில் 2வது கொரோனா மரணமாகவும்...

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா வைரஸ் தொற்று!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிங்கள இணையத்தளமான 'மவ்ரட்ட' செய்தி வெளியிட்டுள்ளது.கேகாலை ஆயுர்வேத மருத்துவரினால் கொரோனாத் தொற்றுக்கான மூலிகை மருந்து எனக்...

Stay Connected

6,380FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

இந்தியத் துணைத் தூதரகத்தில் இடம்பெறவிருந்த குடியரசுத் தின கொண்டாட்டம் இரத்து?

இந்திய மீனவர்களின் உயிரிழப்பின் எதிரொலியாக யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்தில் இடம்பெறவிருந்த குடியரசுத் தின கொண்டாட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறியவருகின்றது.இந்திய மீனவர்கள் பயணித்த படகு கடந்த 18ஆம் திகதி நெடுந்தீவு அருகே இடம்பெற்ற...

மன்னார் மாவட்டத்தில் 2வது கொரோனா மரணம்

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக 2வது நபரும் நேற்று வெள்ளிக்கிழமை (22) உயிரிழந்துள்ள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.மன்னார் மாவட்டத்தில் 2வது கொரோனா மரணமாகவும்...

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா வைரஸ் தொற்று!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிங்கள இணையத்தளமான 'மவ்ரட்ட' செய்தி வெளியிட்டுள்ளது.கேகாலை ஆயுர்வேத மருத்துவரினால் கொரோனாத் தொற்றுக்கான மூலிகை மருந்து எனக்...

கொரோனா தொற்றுக்குள்ளான 787 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 787 பேர் நேற்று (22) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,076 இலிருந்து...

இலங்கையில் மேலும் 02 மரணங்கள் பதிவு!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 02 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (22) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 276 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...