அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடனின் வீட்டுக்கு மேலாக விமானங்கள் பறப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் உப ஜனாதிபதியான ஜோ பைடன், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியின் அதி விளிம்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், டெலாவேர் மாநிலத்தின் வில்மிங்டன் நகரிலுள்ள ஜோ பைடனின் வீட்டுக்கு மேலாக தேசிய பாதுகாப்பு வான்பரப்புத் திட்டம் (நெஷனல் டிபென்ஸ் எயார்ஸ்பேஸ்) அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி ஜோ பைடனின் வீட்டுக்கு மேலாக விமானங்கள் பறப்பதற்கு தற்காலிக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வான்போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.