January 21, 2021, 2:29 am

பூநகரி செம்மண் குன்று பகுதியில் யானைகள் தாக்கிய பகுதிகளை பார்வையிட்ட பா.உ சிறீதரன்

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தெளிகரை செம்மங்குன்று பகுதியில் நேற்று முன்தினம் காட்டு யானைகள் மக்களின் குடியிருப்புகளில் புகுந்து அவர்களின் வாழ்வாதார பயிரான தென்னை மரங்களை சேதப்படுத்தியது.

குறித்த விடயம் தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடுவதற்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார் அவருடன் பச்சிலை பள்ளி தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், உறுப்பினர்கள் மற்றும் பூநகரி பிரதேச சபை உறுப்பினர்கள் சென்று சேதங்கள் தொடர்பாக தகவல்களை பெற்றுக் கொண்டனர் இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.

சங்குபிட்டி பாலத்தின் ஊடாக பூநகரியால் மன்னார் செல்லும் பாதையில் அமைந்துள்ள செம்மங்குன்று கிராமத்தில் காட்டு யானைகள் புகுந்து பயன் தரும் தென்னை மரங்களை அழித்துள்ளது.

இவ்வாறு குறித்த பகுதிக்கு 7 யானைகள் வந்ததாகவும் அவ்வாறு வருகை தந்த யானைகளில் இரண்டு யானைகளின் கால்களில் சங்கிலிகள் கட்டப்பட்டு இருந்ததாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

அப்படி என்றால் குறிப்பிட்ட பகுதிகளுக்கு வளர்ப்பு யானைகள் கொண்டு வந்து விடப்பட்டதாகவே மக்கள் அஞ்சுகிறார்கள். என தெரிவித்ததுடன்.

குறித்த பகுதியில் கிட்டத்தட்ட பயன் தரும் 70 மேற்பட்ட தென்னை மரங்கள் சேதம் அடைந்துள்ளன என்றும் குறித்த சேத விவரங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்து அவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Articles

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 621 பேர் சற்று முன்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 621 பேர் சற்று முன்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 47,215 ஆக...

காங்கேசன்துறையில் சடலங்கள் மீட்பு!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவப் படகு ஒன்று நெடுந்தீவு கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் உயிரிழந்த மீனவர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.இது குறித்த தகவல் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு கடற்படையினரால்...

தம்மிக்க பண்டாரவுக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு!

கொரோனா தொற்றுக்கெதிராக ஔடத பாணி தயாரித்த கேகாலை, தம்மிக்க பண்டாரவுக்கு எதிராக கேகாலை சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தரின் கீழ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பேராதனை பொலிஸ் நிலையத்தில் இவருக்கெதிராக முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டதையடுத்து இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...

Stay Connected

6,361FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

குருந்தூர் மலை தொல்பொருள் ஆராய்ச்சிப் பணியில் தமிழரும் இணைப்பு?

முல்லைத்தீவு, குருந்தூர் மலை ஆதி ஐயனார் கோவில் பகுதியில் நடாத்தப்படும் தொல்பொருள் ஆராய்ச்சிப் பணியில் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்களை இணைத்துக் கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்த...

பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளை தாமதப்படுத்த இடமளிக்க முடியாது – பிரதமர்

கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளை தாமதப்படுத்த இடமளிக்க முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நடைமுறையிலுள்ள சுகாதார விதிமுறைகளை பின்பற்றி பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் பொறுப்பை பெற்றோர் மேற்கொள்ள வேண்டுமெனவும்...