கொரோனா தொற்று பரவலின் 3வது அலை வீரிமாக தாக்கத்தை ஏற்படுத்தி வருகையில் வெலிக்கடை சிறைச்சாலை புதிய கொரோனா வலயமாக உருவெடுத்துள்ளமை மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இலங்கையில் கொரோனா 2வது அலையின் முதல் தொற்றாளர் வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவரே முன்னதாக இனம் காணப்பட்ட நிலையிலேயே கந்தகாடு போதைப்பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையம் கொரோனா வலயமாக மாறியதையடுத்து கந்தகாடு போதைப்பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் பலநூறு பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியிருந்தது.
இலங்கையில் கொரோனா தொற்று பரவலின் 3வது அலையாக மினுவாங்கொட கொத்தணி வியாபித்து சகல மாவட்டங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது வெலிக்கடை சிறைச்சாலை வரை இதன் தாக்கம் விரிவடைந்துள்ளது.
கடந்த தினத்தில் அதிகாரி ஒருவருக்கும் கைதிகள் ஆறு பேருக்கு என ஏழு பேருக்கு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றைய (06) தினம் 22 பெண் கைதிகளுக்கும் ஆண் கைதி ஒருவருக்குமாக மொத்தமாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த அனைவரும் வெலிக்கந்தை கொரோனா சிறப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைத்துறை ஆணையாளர் தெரிவித்திருந்தார்.
இதயையடுத்து வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.