January 15, 2021, 11:20 pm

பி.சி.ஆர் சோதனை முடிவு வெளிவர முன் தப்பி வந்த யாழ்ப்பாணம், கிளிநொச்சியை சேர்ந்த பலருக்கு சிக்கல்!

கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் இதுவரை 2 மாணவர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 122 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்திலே நேற்று 496 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் ஐந்து பேர் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு- பட்டாணிச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். கிளிநொச்சி பொறியில் பீடத்தில் கொரோனா தொற்றுடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மாணவனின் உறவினர்கள் இவர்கள்.

இந்த குடும்பத்துடன் தொடர்புபட்ட இன்னொருவருடன் அடையாளம் காணப்பட்டு இருப்பதால் இதுவரை அந்த கிராமத்திலிருந்து எழு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்தக் கிராமம் முடக்கப்பட்டு அங்கு பரிசோதனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எருக்கலம்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களது குடும்ப தலைவர் கொழும்பில் இருக்கிறார். அவர் அடிக்கடி மன்னாருக்கு வந்து வந்து சென்றிருக்கிறார். அவருக்கு கொழும்பிலே தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அந்த தகவல் கிடைத்ததும் மன்னாரில் அந்த குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டது.

அத்துடன் அவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகள் நேற்று மேற்கொள்ளப்பட்ட போது தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களோடு தொடர்புடையவர்களை இனங்காணப்பட்டு எருக்கலம்பிட்டி பகுதியில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் கேகாலை மாவட்டத்தில் இருந்து வந்த இன்னுமொரு மாணவிக்கும் நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு மாணவனுக்கு அங்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து 122 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் உடுவில் பகுதியில் , மருதனார்மடம் கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளருடன் தொடர்பிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு இருந்த ஒருவர் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொழும்பில் இருந்து வந்து இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் டிசம்பர் மாதத்தில் 153 பேருக்கும், ஜனவரி மாதத்தில் இன்றுவரை 24 பேருக்கு கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்தில் யாழ் மாவட்டத்தில் 11 பேருக்கும், வவுனியா மாவட்டத்திலிருந்து 7 பேருக்கும், மன்னார் மாவட்டத்திலிருந்து 5 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவருக்குமாக 24 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 11 பேர் கொழும்புக்குச் சென்று அங்கே ஒரு விடுதியில் தங்கியிருந்த போது அவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அந்த முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அவர்கள் அங்கிருந்து தப்பி கிளிநொச்சிக்கு வந்திருக்கிறார்கள்.

அதன்பின்னர் அந்த 11 பேரில் மூன்று பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக எங்களுக்கு அறியக் கிடைத்தது. அந்த மூன்று பேரும் இனங்காணப்பட்டு தற்போது சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

ஏனையவர்கள் தற்போது இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு இருகிறார்கள். அவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகளை நாங்கள் இரண்டு வாரங்களின் நிறைவில் மேற்கொள்ள இருக்கிறோம்.

Related Articles

மனைவியை படுக்கைக்கு அழைத்ததாக கூறி நுண்கடன் வங்கி மீது கிளிநொச்சியில் இன்று தாக்குதல்

மனைவியை படுக்கைக்கு அழைத்ததாக கூறி கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் நுண்கடன் வங்கி மீது இன்று தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது குறித்த நிறுவனத்தில் கடன் பெற்ற கோணாவில் பகுதியைச்...

புலத்தின் ஊற்று நிறுவனத்தின் மூலம் கற்றல் உபகரணம் வழங்கல்

தாயகத்தில் உள்ள இனங்கானப்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் நாட்டில் உள்ள தாயக உறவுகளின் பங்காளிப்புடன் புலத்தின் ஊற்று அமைப்பு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது.பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்களின் வேண்டுகோளின்...

பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு!

பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி கற்கும் யாழ்ப்பாணத்தை பார்வீகமாக கொண்ட , இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ்.தீவகம், அல்லைப்பிட்டி- மண்டைதீவுப் பகுதிகளைச் மாணவிகளே இவ்வாறு இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.பிரான்ஸில் மருத்துவத்துறையில்...

Stay Connected

6,163FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்!

நல்லூர் பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13  உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.நல்லூர் பிரதேச சபையின் 2ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் தவிசாளர் ப.மயூரனால் சபையில்...

6 பிள்ளைகளின் தாய் ரயிலில் விழுந்து மரணம்

ஹட்டன் நாவலப்பிட்டிக்கான சேவையில் ஈடுபடும் இரயிலின் முன்னால் பாய்ந்து ஆறு பிள்ளைகளின் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹட்டனில் இடம்பெற்றுள்ளது.ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் தோட்டத்தை சேர்ந்த ஆறு பிள்ளைகளின்...