January 27, 2021, 11:20 am

பிரான்ஸில் காணாமல்போன வவுனியா இளைஞர்கள்…

வவுனியாவில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற இளைஞர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் குறித்த இளைஞர்களை கண்டுப்பிடிப்பதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உதவ வேண்டுமெனவும் அவர்களது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

வவுனியா- கோதண்டர் நொச்சிகுளம் மற்றும் குருமன்காடு பகுதிகளை சேர்ந்த இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

கடந்த இரண்டு வருடங்களிற்கு முன்னர் குறித்த இளைஞர்கள் இருவரும் பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்காக முகவர் ஊடாக இலங்கையில் இருந்து பயணித்துள்ளனர்.

இந்நிலையில் ஆபிரிக்காவின் பல்வேறு நாடுகளில் அவர்கள் தங்கியிருந்த நிலையில்இ வவுனியாவிலுள்ள அவர்களது குடும்பத்தினருடன் தொடர்பினை ஏற்ப்படுத்தி கதைத்து வந்துள்ளனர்.

கோதண்டர் நொச்சிகுளத்தை சேர்ந்த மகேந்திரன் கவிஞன் (வயது 23) என்ற இளைஞர் இறுதியாக இம்மாதம் 3 ஆம் திகதி தனது குடும்பத்தினருடன் கதைத்துள்ளார். அதன் பின்னர் அவருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று வவுனியா- குருமன்காட்டை சேர்ந்த பிரசன்னா (வயது27) என்ற இளைஞரது தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த வாரமளவில் மோரோக்கோவில் இருந்து ஸ்பெயின் நோக்கி பயணிகளை ஏற்றிசென்ற படகு ஒன்று கடலில் மூழ்கியதில் சிலர் உயிரிழந்ததாக அந்த படகில் பயணித்து தப்பிய இளைஞர் ஒருவர் காணாமல்போன இளைஞனின் உறவினர் ஒருவருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த படகில் வவுனியாவில் இருந்து பயணித்த சிலரும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

இலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு விளக்கமளித்த சிறீதரன் எம்.பி

இலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்த அதிகாரிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெளிவுபடுத்தினார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இன்று...

கொழும்பில் 26 நாட்களில் 4,917 பேருக்கு கொரோனா!!!

கொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 369 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்துடன் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 917 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.அதேவேளை, 2020 ஒக்டோபர்...

இரு மாதங்களுக்குள் புதிய அரசமைப்புக்கான சட்டமூலம் முன்வைப்பு!!!

புதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.புதிய அரசியலமைப்பை இயற்றும் பணிகள் தற்போது எந்தக்கட்டத்தில் உள்ளன என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயெ...

Stay Connected

6,387FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

இலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு விளக்கமளித்த சிறீதரன் எம்.பி

இலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்த அதிகாரிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெளிவுபடுத்தினார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இன்று...

கொழும்பில் 26 நாட்களில் 4,917 பேருக்கு கொரோனா!!!

கொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 369 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்துடன் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 917 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.அதேவேளை, 2020 ஒக்டோபர்...

இரு மாதங்களுக்குள் புதிய அரசமைப்புக்கான சட்டமூலம் முன்வைப்பு!!!

புதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.புதிய அரசியலமைப்பை இயற்றும் பணிகள் தற்போது எந்தக்கட்டத்தில் உள்ளன என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயெ...

தளபதி விஜய்யின் அடுத்த படத்திலும் நடிக்கிறார் பூவையார்!

விஜய்யுடன் பிகில், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த பூவையார், அடுத்ததாக தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பூவையார். அந்நிகழ்ச்சியில் கனா பாடல் பாடி ரசிகர்களை...

‘இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கும் கொரோனா’!!!

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 7ஆவது நாடாளுமன்ற உறுப்பினராக இவர் காணப்படுகின்றார்.