29.8 C
Jaffna
Friday, May 7, 2021

இரணைமடு குளத்திலிருந்து 3 போகம் செய்கை மேற்கொள்ள மகாவலி இணைப்பு இருப்பினும் விவசாயிகளாக ஏற்றுக்கொள்வோம்

இரணைமடு குளத்திலிருந்து 3 போகம் செய்கை மேற்கொள்ள மகாவலி இணைப்பு இருப்பினும் விவசாயிகளாக ஏற்றுக்கொள்வோம் என இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் முத்து சிவமோகன் தெரிவித்தார். கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரணைமடுவில் பாய்ச்சலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களிற்கு அப்பால் இரணைமடு திட்டத்தின் கீழ் இணைக்கப்படக்கூடிய பல பிரதேசங்கள் இருக்கின்றன. பாய்ச்சலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மற்றும் அதற்கு வெளி பிரதேசத்திலும் ஏற்குறைய 12 ஆயிரம் ஏன்னர்களை மீண்டும் இரணைமடு திட்டத்தின் கீழ் இணைத்து இதற்கான முன்னேற்றகரமான அபிவிருத்தி நோக்கி நகர வேண்டும் என்று மிக நீண்ட காலமாக சம்மந்தப்பட்ட திணைக்களங்களிற்கு நாங்கள் முன்வைத்து வருகின்றோம்.

அந்த வகையில், இரணைமடு குளத்தின் அபிவிருத்தியின் பின்னர் 3 சிறந்த பயிர்ச்ிசெய்கை மேற்கொண்டுள்ள வேளையில், கடந்த ஆண்டு பெரியகுளம் மற்றும் குமரபுரம் ஆகிய பாய்ச்சலுக்கு அப்பாற்பட்ட இரண்டு பிரதேசங்களை பரீட்சார்த்தமாக இணைப்பின் மூலம் பயிர்ச்செய்கை நடவடிக்கை இவ்வாண்டும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

அதேபோன்று மேலும் இணைக்கப்படவேண்டிய கண்டாவளை 4 ஏக்கர் திட்டம், கோரக்கன்கட்டு, பரந்தன் போன்ற பிரதேசங்களில் மேலும் பல பகுதிகளை பரீட்சார்த்தமாக இணைத்து அவ்வாறான ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கலாம். ஆனால் எதிர்பார்க்காத சில முயற்சிகளால் தாமதம் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

குறிப்பாக 70 ஏக்கர், உடையார்வளவு போன்ற பிரதேசங்களிலிலே தற்பொழுதும் அப்பிரதேசத்தின் ஊடாக நீர் பாய்ந்து வெளியேறிக்கொண்டிருக்கும் நிலையில் அப்பிரதேசங்களை இவ்வாண்டாவது பரீ்சார்த்தமாக இணைத்து விவசாய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எப்பத்தோடும், கரிசனையோடும் நாங்கள் இருக்கின்றோம்.

காலம் கடந்து செல்வதனால் இவற்றுக்கான முன்னேற்பாடு எவ்வாறு அமையும் என்பது தெரியவில்லை. இருப்பினும் இதுவரை இருந்த ஆண்டு காலத்தைவிட இவ்வாண்டு இரணைமடு குள திட்டத்தின் கீழ் அதிகரித்த பயிர்ச்செய்கை மேற்கொண்டுள்ளதன் காரணமாக துறைசார்ந்த அதிகாரிகள் மீது அவ்வாறானதொரு நெருக்கடியை கொடுக்க முடியாதவர்களாக இருக்கின்றோம்.

ஏனெனில் ஓர் உச்சமான பயிர்ச்செய்கை இந்த ஆண்டு மேற்கொண்டிருக்கின்றபோது, மேலதிகமான இணைப்புக்களை சேருங்கள் என்று கூறமுடியாது இருந்தாலும், ஒருபகுதி நீரின் வெளியேற்றம் என்பதை தவிர்க்க முடியாது இருக்கின்றது என்பது தொழில்நுட்பரீதியான உண்மைகள்.

எனவே அந்த அடிப்படையில்தான் இரண்டு பிரதேசங்கள் பகுதியளவில் இணைக்கப்பட்டிருந்தாலும், அவ்வாறான வெளியேற்றங்கள் கோரக்கன்கட்டு பரந்தன், 4ஏக்கர் திட்டம் போன்ற பகுதிகளின் ஊடாக அந்த நீர் வெளியேறிக்கொண்டுதான் இருக்கப்புாகின்றது.

எனவேஇவ்வாறான பிரதேசங்களை இணைப்பதற்கான முயற்சியில் எங்களையும் தாண்டி அ்க்கின்ற மக்களும், அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற விவசாய அமைப்புக்களும் இது தொடர்பில் கரிசனை கொள்வார்களாக இருந்தால் அவற்றை இணைக்கக்கூடிய சாதகமான சூழல் இருப்பதாக நாங்கள் கருதுகின்றோம்.

இரணைமடு குளத்தினுடைய நீரைவைத்து எத்தனை ஏக்கர் செய்ய முடியும் என்பதைவிட, நீர் முகாமைத்துவத்தை தொழில்நுட்பத்தின் ஊடாக எவ்வாறு பயன்படுத்துகின்றோம் என்பதை வைத்துதான் ஏக்கரை அதிகரிக்க முடியும்.

மகாவலி திட்டத்தின் கீழ் ஏக்கர் ஒன்றுக்கு 3 ஏக்கர் அடி நீர் தொடக்கம் 5 ஏக்கர் அடி நீர் வரையாக பயன்படுத்துகின்றபோது 3 போகங்கள் செய்யக்கூடிய சூழல்கள் கூட ஏற்பட்டிருக்கின்றன. இங்கு 5 ஏக்கர் அடி நீர் தொட்கம் 7 ஏக்கர் அடி நீர்வரை பயன்படுத்துவதனால்தான் செய்கை நிலத்தின் பரப்பை அதிகரிப்பது நிறைவேறாது இருக்கின்றது.

இதை நாங்கள் 3 தொடக்கம் 5 ஏக்கர் அடி நீராக பயன்படுத்தும் வகையில் தொழில்நுட்ப ரீதியான பயிர்ச்செய்கை முறைமூலம் நீர் முகாமைத்துவத்தை பேணுவுாமாக இருந்தால் மேலும் ஆக்கணக்கான ஏக்கர்களை உள்வாங்கலாம். இரணைமடு குளத்தில் திருப்திகரமாக நீர் காணப்படுகின்றது. இதை பயன்படுத்துகின்ற நீர் முகாமைத்துவத்தில்தான் மேலதிக கரிசனைகளை செலுத்த முடியும்

அவ்வாறு மேற்கொண்டால் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்களை இரணைமடு திட்டத்தின் கீழ் உள்வாங்கும் விருப்பத்துடன் இருக்கின்றோம். இதற்காக 12 ஆயிரம் ஏக்கர. ்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இரணைமடு குளத்தின் கீழ் 3 போகம் யெ்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற வகையில் வட மாகாண ஆளுநரினால் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இரணைமடு குளத்திற்கு பருவ மழைவீழ்ச்சியினால் கிடைக்கும் நீரில் 3 போகம் செய்ய முடியுமா என அவரிடம் வினவியபோது,

உண்மையில் அவருடைய சிந்தனை எதிர்கால நோக்கோடு வெளியிடப்பட்ட பதிவாக இருக்கலாம். தற்புாது உள்ள நீரை பயன்படுத்தி 3 போகங்கள் செய்வது என்பது சாத்தியப்பாடு இல்லை. ஏனெனில் அவ்வாறு நீரை பாதுகாத்தாலும்கூட எங்களுடைய சிந்தனை எ்களைப்புான் மேலும் பல விவசாயிகள் தங்களிற்கும் இரண்டாவது போகம் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தோடு இருக்கின்றமையால், அவர்களை அணைத்து அவர்களிற் வருமானத்தில் அதிகரிப்பை ஏற்படுத்த வே்ணடும் என்ற சிந்தனை இருப்பதனால் 2ம் போகத்தை எல்லா விவசாயிகளிடமும் சென்றடைய வேண்டும் என்ற திட்டத்தைதான் நாங்கள் விரும்புகின்றோம்.

மாரிகாலத்து மழையினால் கிடைக்கும் நீரினால்தான் இரணைமடு ிரம்புகின்றது. அந்த நீரைவைத்த 3 போகம் செய்வதென்பது நடைமுறைச்சாத்தியம் இல்லை. சிலவேளைகளில் மகாவலி திட்டம் போன்ற எண்ணக்கருத்துக்களாககூட அவை இருக்கலாம். அது சிலவேளைகளில் அரசியல் ரீதியான சிந்தனைகள் மற்றம் தலைமைகளோடு எடுக்கப்படுகின்ற முடிவாக இருந்து விவசாயிகளிற்கு அவ்வாறு மூன்று போகம் செய்யக்கூடிய வாய்ப்ப கிடைக்குமாக இருந்தால் அது எமக்கு கிடைக்கும் வரப்பிரசாதமாகவும், வாய்ப்பாகவும் நாங்கள் கருதுவோம்.

மகாவலி திட்டத்தின் கீழ் இரைணமடு குளம் உள்வாங்கப்பட்டால் அதனை நீங்கள் வரவேற்பீர்களா என அவரிடம் வினவியபோது,

அந்த நீரை பயப்படுத்தி நன்மை பெறப்போகும் விவசாய சமூகம் என்ற வகையில் அதனை நாங்கள் வரவேற்பதில் பின்நிக்கப்போவதில்லை. அதனுடைய பின்விளைவுகள் சம்மந்தமாகவு்ம, திட்டங்கள் எவ்வாறு நெறிப்படுத்தப்படும்,மகாவலி அபிவிருத்தி சபையின் கீழ்தான் அந்த அபிவிருத்தி கொண்டுவரப்படுமாக இருந்தால் அது சம்மந்தமாக ஒரு பரிசீலணையை நாங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை உருவாகும். அது நேரடியாக நீர்பாசன திணைக்களத்தின் கீழ் மகாவலி நீர் வருமாக இருந்தால் அது வரவேற்க தக்க ஒன்றாக இருக்கும். என அவர் குறிப்பிட்டார்.

Related Articles

ஈழத்தமிழர் நல்வாழ்விற்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்குங்கள்

தமிழகத்தில் நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இன்று பதவி ஏற்கும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக (தி.மு.க) அரசிற்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள்...

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம் ! விடுதி மாணவர்களை வீடுகளுக்கு அனுப்பத் தீர்மானம் – பரீட்சைகள் திட்டமிடப்பட்டபடி நடக்கும்

நாட்டில் எழுந்துள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள பொறியியல் பீடம், விவசாய பீடம், தொழில் நுட்ப பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு, விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை...

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனை கௌரவித்த கூட்டமைப்பு

க.பொ.த உயர்தர பரீட்சையில் கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவனை இன்றைய தினம் அவரது இல்லத்தில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும்...

Stay Connected

6,870FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

ஈழத்தமிழர் நல்வாழ்விற்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்குங்கள்

தமிழகத்தில் நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இன்று பதவி ஏற்கும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக (தி.மு.க) அரசிற்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள்...

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம் ! விடுதி மாணவர்களை வீடுகளுக்கு அனுப்பத் தீர்மானம் – பரீட்சைகள் திட்டமிடப்பட்டபடி நடக்கும்

நாட்டில் எழுந்துள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள பொறியியல் பீடம், விவசாய பீடம், தொழில் நுட்ப பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு, விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை...

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனை கௌரவித்த கூட்டமைப்பு

க.பொ.த உயர்தர பரீட்சையில் கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவனை இன்றைய தினம் அவரது இல்லத்தில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும்...

நடிகர் பாக்கியராஜ் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி !

நடிகர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அவர்களது மகன் நடிகர் சாந்தனு சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார். தொற்று உறுதியானதைத் தொடர்ந்து இருவரும் வீட்டிலேயே தங்களை...

உதயநிதி – ஆரி சந்திப்பு ! இனி தமிழ்நாட்டில் சூரியன் பிரகாசமாக ஒளிரட்டும்

நடிகரும் பிக் பாஸ் டைட்டில் வின்னருமான ஆரி அர்ஜுனன் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்தி உள்ளார்.தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், இன்று முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றுள்ளார்.தமிழ் சினிமாவில்...