29.8 C
Jaffna
Sunday, April 18, 2021

மாகாண சபைத் தேர்தலுக்கு பின், ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் – ஜீவன் தொண்டமான்

பொதுவான கல்வி அமைச்சின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள, ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சு, எதிர்வரும் மாகாண சபை தேர்தலுக்கு பின்னர், மீளபெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

ஊவா மாகாணத்தில் தனித்து இயங்கிய தமிழ்க் கல்வி அமைச்சு, அதிவிசேட வர்த்தமானி மூலம், பொதுவான கல்வி அமைச்சின் கீழ் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று முதல் அமுலாகும் வகையில், கடந்த 17ஆம் திகதி குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சானது, கடந்த 3 ஆண்டுகளாக, மாகாண வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நீர்வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள், கூட்டுறவு விவகார அமைச்சு என்பனவற்றுடன் ஒருங்கிணைந்த அமைச்சாக செயற்பட்டு வந்தது.

தமிழ்க் கல்வி அமைச்சு தவிர்ந்த, கல்வி அமைச்சு, நிதி, திட்டமிடல், சட்டமும் சமாதானமும், மாகாண உள்ளூராட்சி, மின்சக்தி, வலுசக்தி, நிர்மாணத்துறை, கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் காணி தொடர்பான அமைச்சு என்பனவற்றுடன் ஒருங்கிணைந்த அமைச்சாக செயற்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த 17ஆம் திகதிக்கு திகதியிடப்பட்ட குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்லினால் வெளியாக்கப்பட்டிருந்தது.

இதன்படி, ஊவா மாகாண வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நீர் வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கூட்டுறவு விவகாரம் தொடர்பான அமைச்சுகளின் விடதானங்களுடன் ஒருங்கிணைந்து செயற்பட்ட தமிழ்க் கல்வி அமைச்சு, அதிவிசேட வர்த்தமானியின் மூலம் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண நிதியும், திட்டமிடலும், சட்டமும், சமாதானமும், கல்வி, மாகாண உள்ளூராட்சி, மின்சக்தி, வலுசக்தி, நிர்மாணத்துறை, கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் காணி தொடர்பான அமைச்சுடன் தமிழ்க் கல்வி அமைச்சு அதிவிசேட வர்த்தமானி மூலம் மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொட்டகலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு, கருத்து தெரிவித்தபோது, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related Articles

பாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கம்!

பாகிஸ்தானில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ...

எந்த நேரத்திலும் அலெக்சி நவால்னி உயிரிழக்ககூடும்!

ஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வரும் அலெக்சி நவால்னி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு...

நாமலுக்கு தலைவர் பதவி… வழங்கி வைத்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் "ஊருடன் உரையாடல் - கிராமிய அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி" என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த செயலணி ஏப்ரல் 09...

Stay Connected

6,849FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

பாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கம்!

பாகிஸ்தானில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ...

எந்த நேரத்திலும் அலெக்சி நவால்னி உயிரிழக்ககூடும்!

ஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வரும் அலெக்சி நவால்னி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு...

நாமலுக்கு தலைவர் பதவி… வழங்கி வைத்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் "ஊருடன் உரையாடல் - கிராமிய அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி" என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த செயலணி ஏப்ரல் 09...

கேப்டன் பதவியை வழங்கியது ஏன்? தமிழன் தினேஷ் கார்த்திக் விளக்கம்

 தமிழக வீரரான தினேஷ் கார்த்திக், கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியை இயான் மோர்கனிடம் கொடுத்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர்,...

கோபா டெல் ரே கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றிய பார்சிலோனா

கோபா டெல் ரே இறுதிப் போட்டியில் பார்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் பில்பாவோவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. கோபா டெல் ரே வரலாற்றில் 31 முறை வெற்றிகளைப் பெற்ற பார்சிலோனா மிகவும்...