பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் உத்தியோகபூர்வ பெயர்கள், மத மற்றும் இன ரீதியாக பெயரிடப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஒருவரின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
கட்சிகளின் யாப்புகளில் இவ்வாறான சரத்துக்கள் அடங்கியுள்ளதா? என்பது தொடர்பில் குறித்த குழு ஆராயவுள்ளது.
இந்த குழுவின் பணிகளை கண்காணிப்பதற்காக ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர், அதன் பணிப்பாளர் நாயகம் மற்றும் செயலாளரும் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.