29.6 C
Jaffna
Monday, April 19, 2021

காலம் கடந்த கல்விக் கொள்கை உலகுடன் முன்னோக்கிச் செல்ல முடியாத சமூகத்தையே உருவாக்கும் – ஜனாதிபதி

காலம் கடந்த கல்விக் கொள்கையினால் நவீன உலகுடன் முன்னோக்கிச் செல்ல முடியாத சமூகம் ஒன்றே உருவாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்மொழியப்பட்ட கல்வி மறுசீரமைப்பு பற்றி பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கான ‘எண்மான தளத்தை’ உருவாக்குவதற்காக அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

‘எண்மான தளம்’ கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைத்து ‘பேண்தகு கல்விக் கொள்கை சட்டகமொன்றை’ உருவாக்குவதற்கு மக்களுக்கு கிடைக்கும் அரிய சந்தர்ப்பமாகும்.

ஒரு நாட்டின் சிந்தனை மற்றும் தெலைநோக்கு உருவாகுவது அந்நாட்டின் கல்விக் கொள்கையின் மூலமேயாகும்.

காலம் கடந்த கல்விக் கொள்கையினால் உருவாவது, நவீன உலகுடன் முன்னோக்கிச் செல்வதற்கு முடியாத சமூகம் ஒன்றாகும்.

பரந்தளவிலான மக்கள் பிரதிநிதித்துவத்துடன் உருவாகும் ஒரு கொள்கையை, அரசாங்கம் மாறும்போது மாற்ற முடியாது என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற வகையில், அறிவை மையப்படுத்திய மனித வள மூலதனத்தை திட்டமிட்டு போஷிப்பது ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தின் முக்கிய நோக்கமாகும்.

அதற்காக பல்வேறு கல்வி மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டும்.

அடுத்து வரும் 03 மாதங்கள் egenuma.moe.gov.lk என்ற இணையத்தளம் மூலம், மக்கள் புதிய கல்வி மறுசீரமைப்புக்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை ‘எண்மான தளத்துக்கு’ அனுப்ப முடியும்.

முன்பள்ளிக் கல்வி, ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்வி, தொழில் மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி, உயர் மற்றும் தொழிற் கல்வி என்ற பிரதான 04 உப துறைகளின் கீழ் மறுசீரமைப்பு ஆலோசனைகள் முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் உள்ளது.

பேண்தகு கல்விக் கொள்கை ஒன்றுக்காக மிகவும் பரந்தளவில் பொதுமக்களின் கருத்துக்கள், ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு ‘எண்மான தளம் ‘ திறக்கப்பட்டுள்ளது.

உயர் கல்விக்கு பிரவேசிப்பதற்கு அதிக வாய்ப்புக்களை வழங்குவது மறுசீரமைப்பின் மற்றொரு நோக்கமாகும்.

பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்படும் பாடவிதானங்களை நவீனமயப்படுத்துவதுடன், மறுசீரமைப்பின் மூலம் தொழில்திறன் விருத்தி, தொழிலில் ஈடுபடும்போது தமது கல்வித் தகைமைகளை விருத்தி செய்து கொள்வதற்காக திறந்த பல்கலைக்கழக கட்டமைப்பை முழுமையான மாற்றத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதேவேளை, இணையம் மற்றும் தொழிநுட்ப குறைபாடுகளை, 2023ஆம் ஆண்டாகும்போது முழுமையாக நீக்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related Articles

அரசியல் கைதிகளைச் சந்தித் முன்னணி எம்.பிக்கள்

முன்னணி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல்கைதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அமைதிக்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள்! சிறீதரன்

அமைதிக்காகவும் மனிதாபிமானத்திற்காகவும் போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் 33 ஆவது ஆண்டு நினைவு...

தொல்லியல் திணைக்களம் தவிசாளர் நிரேசிற்கு எதிராக வழக்கு

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள...

Stay Connected

6,849FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

அரசியல் கைதிகளைச் சந்தித் முன்னணி எம்.பிக்கள்

முன்னணி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல்கைதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அமைதிக்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள்! சிறீதரன்

அமைதிக்காகவும் மனிதாபிமானத்திற்காகவும் போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் 33 ஆவது ஆண்டு நினைவு...

தொல்லியல் திணைக்களம் தவிசாளர் நிரேசிற்கு எதிராக வழக்கு

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள...

அசேல சம்பத் பிணையில் விடுதலை!

உணவக உரிமையாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர் 14ஆம் திகதி மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இன்று வரை...

உயர்நீதிமன்றில் சட்டமா அதிபரால் மனுத்தாக்கல்!

2016ஆம் ஆண்டு  மார்ச் 29ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி சட்டமா அதிபரால் உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி...