28.6 C
Jaffna
Wednesday, April 21, 2021

ரவிக்கு எதிரான பிடியாணையை வலுவற்றதாக்க கோரிய மனு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவு

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் 7 பேரை கைது செய்வதற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை சட்ட வலுவற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை முன்கொண்டு செல்வது தொடர்பில் எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்பட்ட முறிகள் ஏலத்தின் போது 50 பில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய முறிகள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பிரதி மன்றாடியர் நாயகம் மிலிந்த குணதிலக மன்றுரைத்துள்ளார்.

இதற்கமைய, குறித்த மனுவை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதற்கான அவசியம் தொடர்பில் கேள்வி எழுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது தரப்பினரை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணை மற்றும் பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் சமர்ப்பித்துள்ள அறிக்கை, குறித்த வழக்கின் கீழ் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சார்பில் மன்றில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி மன்றுரைத்துள்ளார்.

தமது தரப்பினரின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையால் ஆலோசனை பெற்றுக் கொள்வதற்கு கால அவகாசம் வழங்குமாறும் அவர் மன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த வழக்கை எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி மீள அழைப்பதற்கு தீர்மானித்துள்ளது.

Related Articles

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் இலங்கையில் அதிகரித்துள்ள நிலையில், தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.இது தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகம்...

கொரோனா தொற்றுக்குள்ளான 367 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 367 பேர் நேற்று (20) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,105 இலிருந்து...

இலங்கையில் மேலும் 05 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (20) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 620 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...

Stay Connected

6,849FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் இலங்கையில் அதிகரித்துள்ள நிலையில், தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.இது தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகம்...

கொரோனா தொற்றுக்குள்ளான 367 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 367 பேர் நேற்று (20) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,105 இலிருந்து...

இலங்கையில் மேலும் 05 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (20) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 620 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...

கிளிநொச்சி வட்டக்கச்சியில் 5 உடும்புளுடன் ஒருவர் கைது!

வட்டக்கச்சி இராமநாதபுரம் புதுக்காடு காட்டுப்பகுதியில் ஐந்து உடும்புகளை வேட்டையாடி இறைச்சிக்காக வைத்திருந்த நிலையில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.வேட்டையாடி உடும்புகளை வீட்டில் வைத்திருந்த தகவல் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட போது...

ஊர்காவற்றுறை இறங்குதுறை கடலில் தவறி விழுந்த கஜதீபன்!

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன், யாழ். ஊர்காவற்றுறை இறங்குதுறை கடலில் தவறி விழுந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,அனலை தீவில் இடம்பெற்ற மரண வீட்டிற்கு சென்று...