நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் தனது சட்டத்தரணிகள் ஊடாக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரி ரஞ்சன் சட்டத்தரணிகள் ஊடாக மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
நீதிமன்றை அவமரியாதை செய்த குற்றத்திற்கான ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனை குறித்த தீர்ப்பினை மீள் பரிசீலனை செய்யுமாறு ரஞ்சனின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
இதன்படி அநேகமாக ரஞ்சன் ராமநாயக்க தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கக்கூடிய சாத்தியங்கள் அதிகமாகக் காணப்படுகின்றது.