28.6 C
Jaffna
Wednesday, April 21, 2021

வடக்குக்காணி ஆவணங்களின் இடமாற்றம்தமிழ் நிலங்களை அபகரிக்கும் கபடத்திட்டம்பொ. ஐங்கரநேசன் கண்டனம்

யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்துக்குள் இயங்கி வரும் காணிச் சீர்திருத்த ஆணைக் குழுவின்வடமாகாணத்துக்கான அலுவலகத்தில் இருந்து காணி ஆவணங்கள் அநுராதபுர அலுவலகத்துக்கு இடம் மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு இடம்மாற்றப்படுவதற்குப் பலரும் எதிர்ப்பை வெளியிட்டபோதும், இரவோடு இரவாக யாழ் மாவட்டம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களினதும் ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. தமிழ் நிலங்களை அபகரித்து தென் இலங்கை வாசிகளுக்குக் கையளிக்கும் அரசாங்கத்தின் கபடத் திட்டமே இதுவாகும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.வடக்கின் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள் அநுராதபுரத்துக்கு இடம் மாற்றப்பட்டமை தொடர்பாக பொ. ஐங்கரநேசன் இன்று (15.03.2021) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் வசமுள்ள காணிகள் அரச காணிகள் என்றாலும் இவை மக்களின் உறுதிக் காணிகள் ஆகும். இவை 1972ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அம்மையார் அவர்களால் 50 ஏக்கர்கள் காணிக்கு மேல் ஒருவர் உரிமையாளராக இருக்க முடியாது என்று கொண்டுவரப்பட்ட நிலஉச்சவரம்புச் சட்டத்தின் காரணமாக அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட காணிகள். வடக்கில் எமது மக்களால் கையளிக்கப்பட்ட ஏறத்தாழ 12,000 ஏக்கர் பரப்புடைய காணிகளின் ஆவணங்களே இப்போது அநுராதபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவிடமுள்ள வடக்கு மாகாணக் காணிகள் பற்றிய விபரங்கள் எவையும் வடக்கு மாகாண சபையிடம் இல்லை. வடமாகாணக் காணித் திணைக்களம், வடமாகாண ஆளுநர் அலுவலகம் இவை பற்றிய விபரங்களைக் கோரியபோதும் காணிச் சீர்திருத்த ஆணைக்குழு இவற்றைத் தெரியப்படுத்த மறுத்ததோடு, மிகவும் இரகசியமாகக் காணிகளைச் சிங்கள மக்களுக்கு நீண்டகாலக் குத்தகைக்கு வழங்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு, பளையில் சிங்கள மக்களுக்குக் காணிகள் ஒதுக்கப்பட்டிருப்பது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரு இலட்சம் காணித் துண்டுகளைச் சுயதொழில் முனைவோருக்குப் பகிர்ந்தளிக்கும் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்திருக்கும் நிலையிலேயே காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவினால் வடக்கின் ஆவணங்கள் அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இது, வடக்கில் சிங்கள மக்களுக்குக் காணிகளை வழங்கும் கரவான திட்டத்தின் முதற்படியேயன்றி வேறல்ல் இது, தமிழ் மக்களை அவர்களது பாரம்பரிய தாயகத்திலேயே சிறுபான்மையினராக்கும் பொருட்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு நிகழ்ச்சி நிரலின் ஓரங்கம் ஆகும். இக்காணிகள் வடக்கைப் பூர்வீகமாகக் கொண்டுள்ளவர்களுக்கு மாத்திரமே பகிர்ந்தளிக்கப் படுவதைத் தமிழ்மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதிகள் எப்பாடுபட்டேனும் உறுதிசெய்ய
வேண்டும் என்று மேலும் தெரிவித்தார் வெெ

Related Articles

கிளிநொச்சி வட்டக்கச்சியில் 5 உடும்புளுடன் ஒருவர் கைது!

வட்டக்கச்சி இராமநாதபுரம் புதுக்காடு காட்டுப்பகுதியில் ஐந்து உடும்புகளை வேட்டையாடி இறைச்சிக்காக வைத்திருந்த நிலையில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.வேட்டையாடி உடும்புகளை வீட்டில் வைத்திருந்த தகவல் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட போது...

ஊர்காவற்றுறை இறங்குதுறை கடலில் தவறி விழுந்த கஜதீபன்!

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன், யாழ். ஊர்காவற்றுறை இறங்குதுறை கடலில் தவறி விழுந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,அனலை தீவில் இடம்பெற்ற மரண வீட்டிற்கு சென்று...

நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும்…

தமிழ் சிங்கள புதுவருட பண்டிகை காலங்களில் பொதுமக்களின் நடமாட்டம் காரணமாக கொரோனா தொற்று அதிகரித்திருந்தால் அது நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும் என தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி, வைத்தியர் சுதத் சமரவீர...

Stay Connected

6,849FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

கிளிநொச்சி வட்டக்கச்சியில் 5 உடும்புளுடன் ஒருவர் கைது!

வட்டக்கச்சி இராமநாதபுரம் புதுக்காடு காட்டுப்பகுதியில் ஐந்து உடும்புகளை வேட்டையாடி இறைச்சிக்காக வைத்திருந்த நிலையில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.வேட்டையாடி உடும்புகளை வீட்டில் வைத்திருந்த தகவல் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட போது...

ஊர்காவற்றுறை இறங்குதுறை கடலில் தவறி விழுந்த கஜதீபன்!

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன், யாழ். ஊர்காவற்றுறை இறங்குதுறை கடலில் தவறி விழுந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,அனலை தீவில் இடம்பெற்ற மரண வீட்டிற்கு சென்று...

நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும்…

தமிழ் சிங்கள புதுவருட பண்டிகை காலங்களில் பொதுமக்களின் நடமாட்டம் காரணமாக கொரோனா தொற்று அதிகரித்திருந்தால் அது நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும் என தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி, வைத்தியர் சுதத் சமரவீர...

கரைச்சியில் வீதி வெளிச்சங்களை பொருத்தவதற்கு உதவி உள்ளூராட்சி ஆணையாளர் தடை..

கரைச்சியில் வீதி வெளிச்சங்களை பொருத்தவதற்கு உதவி உள்ளூராட்சி ஆணையாளர் தடை விதித்துள்ளார் என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்கரைச்சி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டு...

யாழ். மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்தினை புனரமைக்க தீர்மானம்!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்தினை புனரமைத்து சிறப்பான முறையில் பயன்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.நேற்று(19.04.2021) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், அதனை...