நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன், டக்ளஸ், திலீபன், வியாழேந்திரன் மற்றும் பிள்ளையான் ஆகியோர் அரசாங்கத்தின் முகவர்களாகவும், அடிமைகளாகவும் உள்ளனர் என்று யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது –
தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கிறோம். இது எமது நீதிக்கான போராடடம். இலங்கையில் இருக்கும் கடடமைப்புகளால் தமிழர்களின் பிரச்சினைகளுக்கான நீதி கிடைக்காது என்பது நிரூபணமான வகையிலேயே சர்வதேச குற்றவியல் நீதிமன்றை நோக்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சர்வதேசத்தை நோக்கிச் செல்லும் போது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நேர்மையாகச் செயற்பட வேண்டும். சரியான நிலைப்பாட்டில் சர்வதேசச் சமூகத்தை நோக்கிச் செயற்பட்டால் இந்த பூகோளப் போட்டியை எங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ள முடியும். அதில் நம்பிக்கை இருக்கிறது என்றார்.