March 8, 2021, 11:47 am

தீர்மான முதலாவது வரைபில் திருப்தி இல்லை – கஜேந்திரகுமார்

கோ குரூப் நாடுகளால் ஐநா மனித உரிமை பேரவையிலே நிறைவேற்றவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைபில் திருப்தி இல்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மெலும் தெரிவிக்கையில்,ஐநா மனித உரிமை பேரவையிலே நிறைவேற்றவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைபை கோ குரூப் நாடுகள் வெளியிட்டுள்ளன. குறித்த வரைபு வெளியிடுவதற்கு முதல் இங்கு இருக்கக்கூடிய கட்சிகளும், சிவில் சமூகமும் இணைந்து கடிதம் ஒன்றை மனித உரிமை ஆணையாளருக்கும் உறுப்பு நாடுகளிற்கும் விசேடமாக குா குரூப் நாடுகளிற்கும் அனு்பப்பட்டிருந்தது. 

பொறுப்பு கூறல் என்ற விடயம் மனித உரிமை பேரவையிலிருந்து எடுக்கப்பட்டு மேல் இடத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இரண்டாவதாக இலங்கை தொடர்பாக தொடர்ந்து நடக்கின்ற மனித உரிமைகளை அவதானிக்க மனித உரிமை அலுவலகம் ஒன்றை அமைப்பது தொடர்பிலும், மூன்றாவதாக நீதிமன்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு சாட்சியங்களை திரட்டுவது உள்ளிட்ட விடயங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் தற்போது வெளியான வரைபை நாங்கள் பார்க்கின்றபோது இதுவரை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மிகவும் பலவீனமான வரைபாகதான் நாங்கள் அதை பார்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

பொறுப்புகூறல் என்ற விடயத்தை வெளியில் எடுக்க வேண்டும் என்று நாங்களே கேட்டிருக்கின்ற இடத்தில், அவ்விடயம் பெரிய அளவில் குறிப்பிடப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. சர்வதேச குற்றவியல் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற தேவை வலியுறுத்தப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது..
ஆனால் துரதிஸ்டவசமாக குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை தவிர்க்கப்பட்டுள்ளமையானது கடும் ஏமாற்றமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

இலங்கை அணியின் தோல்வி குறித்து மிக்கி ஆர்தர் கவலை!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது போட்டிகளில் தோல்வியடைந்தமை தொடர்பில் தான் மிகவும் வருந்துவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக இது குறித்து...

இந்தியாவுக்கு எதிரான T-20 போட்டியில் ஜொப்ரா ஆர்ச்சர் விளையாடுவதில் சந்தேகம்!

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் (Jofra Archer) இந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.ஜெப்ரா ஆர்ச்சருக்கு முழங்கையில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே அவர் இந்த...

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய வயோதிபப் பெண் உயிரிழப்பு- யாழில் சம்பவம்

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியிலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில், சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பிய வயோதிபப் பெண், மறுநாளான இன்று (திங்கட்கிழமை) உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு கொரோனா வைரஸ் தொற்றே காரணம்...

Stay Connected

6,584FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

இலங்கை அணியின் தோல்வி குறித்து மிக்கி ஆர்தர் கவலை!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது போட்டிகளில் தோல்வியடைந்தமை தொடர்பில் தான் மிகவும் வருந்துவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக இது குறித்து...

இந்தியாவுக்கு எதிரான T-20 போட்டியில் ஜொப்ரா ஆர்ச்சர் விளையாடுவதில் சந்தேகம்!

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் (Jofra Archer) இந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.ஜெப்ரா ஆர்ச்சருக்கு முழங்கையில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே அவர் இந்த...

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய வயோதிபப் பெண் உயிரிழப்பு- யாழில் சம்பவம்

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியிலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில், சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பிய வயோதிபப் பெண், மறுநாளான இன்று (திங்கட்கிழமை) உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு கொரோனா வைரஸ் தொற்றே காரணம்...

பாடசாலை சிறுமிக்கு குவியும் பாராட்டுக்கள்…

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மாணவிக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்த சக மாணவி ஒருவருக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணமுள்ளன.காலி தலேகான பிரதேசத்தை சேர்ந்த ஹன்சனி யஷோதரா என்ற மாணவியே கொரோனா தொற்றுக்குள்ளான விஷ்மி விஹாங்காய...

மினி சூறாவளியால் டிக்கோயாவில் 23 குடியிருப்புகள் சேதம்!

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா படல்கலை மேற்பிரிவு தோட்டத்தில் நேற்று (07) மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக அத்தோட்டத்திலுள்ள 23 தொடர் மற்றும் தனிகுடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.கடும் காற்று காரணமாக இந்த தோட்டத்தில்...