கிளிநொச்சி மாவட்ட அரச செயலக மாநாட்டு மண்டபத்தில் பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனத்தை மீள் இயக்குவது தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்று போது மேற்குறித்தவாறு தனது கோரிக்கையினை கரைச்சி பிரதேச சபை தவிசாளர் விடுத்துள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக இயங்காது இருந்த பரந்தன் இரசாயன தொழிற்சாலையை அரசாங்கம் தனியார் கம்பனி ஒன்றிக்கு வழங்கி அதனை மீள இயக்குவது கலந்துரையாடப்பட்டது
இக்கலத்துரையாடலில்
12வகையான இரசாயன உற்பத்திகள் இதில் இடம் பெறும் எனவும். அதில் 01வது கோஸ்ரிக் சோடா உற்பத்தி செய்வது எனவும்.அதற்கு 1200 மில்லியன் ரூபா செலவு செய்வது எனவும் தெரிவிக்கப்பட்டது.
தென்கொரிய நாடுகளில் இருந்து இயந்திரங்களை கொள்வனவு செய்வது
இதனால் 95மனித ஆட்கள் மாத்திரம் இனைத்து கொள்ளப்படுவர்கள் என்றும் அதில் நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் தொழில்நுட்பம் என 60மேற்பட்ட மேல் நிலை அதிகரிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த தவிசாளர்
பரந்தன்இரசாயன கூட்டுத்தாபனத்திற்கு 217 ஏக்கர் அளவு கொண்ட காணியினை மீளப்பெறுவது தொடர்பான முயற்சி மேற்கொள்வது உண்மையில் மீள்பரீசிலனை செய்யவேண்டும் என்றும்.
உண்மையில்
குறித்த காணியில் 15ஏக்கர் காணி இராணுவத்தின் பயன்பாட்டிற்கு வழங்குவது என்றும் கடந்த 35ஆண்டுகாலமாக
பொதுமக்கள் வாழ்ந்து வரும் பொதுமக்கள் வாழ்விடங்கள் 20ஏக்கர் மற்றும் வாழ்வாதார வயல் நிலங்கள் 46ஏக்கர் என்பவற்றை மீளப்பெறவேண்டும் என்ற தீர்மானம் பரீசீலனை செயவேண்டும் என தீர்மானிப்பது சரியான தீரமானம் அல்ல என்று கூறிப்பிட்டார்.
அதாவது
குறித்த காணியில் 15 ஏக்கர் okஇராணுவத்திற்கு வழங்க முடியும் என்றால் 35 ஆண்டு காலத்திற்கு மேலாக வாழ்ந்து வரும் குறித்த மக்களின் வாழ்விட நிலங்கள் மற்றும் வாழ்வாதார வயல் நிலங்களும் மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்றும்.
தனித்து இராசாயன கைத்தொழிற்சாலை என்பதனால். மட்டும்இன்றி மக்களின் சுற்றுபுறச்சூழல் பாதிப்பு குறித்து மக்கள் திருப்த்தி அடைதல் வேண்டும்.
அத்துடன் நவீன தொழில்நுட்பம் என்ற போர்வையில் மிக குறைந்த ஊழியர்கள் உள்வாங்கபப்படும் என்னும் திட்டம் அதிரிக்க வேண்டும்
எனவே பொதுமக்கள் நன்மையை கருத்தில் கொண்டு பொது மக்கள் மற்றும் துறைசார் வல்லுனர்களினதும் கருத்துக்கள் பெறப்பட்டு இறுதி முடிவு எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.