February 27, 2021, 12:26 pm

யார் இந்த ஆவா அருண்?அங்கயனுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த அரச அமைச்சரான தயாசிறி ஜெயசேகர பங்களிப்புடன் ஆவாக்குழு பிரபலமான அருண் என்பவனால் யாழ்.பல்கலையில் மீள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று யாழ்.நகரில் நடத்தப்பட்டுள்ளது.

அழைத்துவரப்பட்ட சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள் மற்றும் சிலர் சகிதம் இலங்கை கொடியை தாங்கியவாறு இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அங்கயன் இராமநாதன் சகிதம் தங்கியுள்ள தயாசிறியை வழிநடத்திய ஆவர் குழு அருண் யார் என்பது பற்றிய விளக்கமிது 

2017 இல் காக்கைதீவு பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு 11 மாதங்கள் யாழ்ப்பாண சிறைச்சாலையில் “2017.03.09 Jaffna MC Court 292/17” என்கிற  வழக்கு இலக்கத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு இருந்த “அருண் சித்தார்த் மைத்ரேயன்” எனும் முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கே அவர்களால் உருவாக்கப்பட்ட இலங்கை இராணுவ புலனாய்வு துறை உறுப்பினர் ஒருவரை  சிங்கள ஊடகங்கள் ஊடக தமிழ் மக்களின் பிரதிநிதியாக அடையாளம் காட்ட இலங்கை இராணுவத்தினர் முயற்சித்து வருகிறார்கள்  

“அருண் சித்தார்த் மைத்ரேயன்”  என்கிற இந்த நபர் மீது கஞ்சா வழக்கிற்கு மேலதிகமாக  மல்லாகம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் வயோதிப் பெண் ஒருவரிடம் 10 லட்சம் ரூபா அல்லது அதற்கு அண்மித்த தொகைப் பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றினார் என்று  குற்றவியல் சட்ட வழக்கு ஒன்றும் பதியபட்டு இருக்கிறது 

யாழ்ப்பாணம் சுன்னாகத்தை பிறப்பிடமாகவும் நீர்கொழும்பை வாழ்விடமாகவும் கொண்ட “அருண் சித்தார்த் மைத்ரேயன்” என்கிற மேற்குறித்த புலனாய்வு உறுப்பினர் ஆரம்பத்தில் குமார் குணரட்ணத்தின் தலைமையிலான முன்னிலை சோசலிச கட்சியில் செயல்பட்டு வந்தார். அதே நேரம் இவரின் தாயாரின் சகோதரர்கள்  இந்தியா இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் உறுப்பினர்கள் என சொல்லப்படுகின்றது 

கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் மைத்திரிபால சிறிசேனா ,  யாழ்ப்பாணம் வந்து இருந்த  திரு ரணில் விக்ரமசிங்கே  மற்றும் சுகாதார அமைச்சராக இருந்த  ராஜித சேனாரத்ன போன்ற பிரமுகர்களை சந்தித்து பேசுவதற்கான ஏற்பாடுகளையும்  “அருண் சித்தார்த் மைத்ரேயன்”  அவர்களுக்கு இலங்கை இராணுவத்தினர் செய்து கொடுத்து இருந்தனர் . அதே போல நல்லாட்சி அரசாங்க காலத்தில்  ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சார்பில் சாட்சியமளிக்க  “அருண் சித்தார்த் மைத்ரேயன்”  அவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்த முயற்சித்த போதும் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.  உண்மையில் பல்வேறு வழிகளில் “அருண் சித்தார்த் மைத்ரேயன்” எனும் இந்த நபரை சக்தி மிக்க மனிதராக உருவாக்கும் வேளைகளில் இலங்கை இராணுவம் ஈடுபட்டு வருகிறது 

ராஜபக்சே குடும்பம் ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த பொதுத்தேர்தல் காலத்தில் இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவின்  சிபாரிசில் அங்கயன் இராமநாதன் தலைமையிலான சுதந்திர கட்சியில் அணியில் தேர்தலில் போட்டியிட ஏற்பாடு செய்து இருந்த போதும் சில ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று  “அருண் சித்தார்த் மைத்ரேயன்”  தோல்வியடைந்து இருந்தார் 

Related Articles

பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் மாற்றம் ?

பிக் பாஸ் சீசன் 4ன் முடிவை தொடர்ந்து வரும் ஜூன் மாதம் பிக் பாஸ் சீசன் 5 துவங்கவிருக்கிறது.ஆனால் இதில் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவாரா என்பது தான் கேள்வி. தொடர்ந்து நான்கு...

தா.பாண்டியன் ஐயாவின் குரல் மௌனித்தது ஈழத்தமிழருக்கு பெரும் இழப்பு: சிறீதரன் எம்.பி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தேசியக்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் தனது 88வது வயதில் சுகயீனம் காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.கட்சி பேதமின்றி அனைத்துத் தரப்பினராலும் நேசிக்கப்பட்டவர் தா.பாண்டியன். அவரது மறைவு...

பாடசாலை மாணவிகளை கடத்திச்சென்ற தீவிரவாதிகள் !

நைஜீரியா பெண்கள் தங்கிப் படிக்கும் உயர்தரப் பாடசாலை ஒன்றுக்குள் புகுந்த போகோ ஹராம் தீவிரவாதிகள் அங்கிருந்து 317 மாணவிகளைக் கடத்திச் சென்றுள்ளனர். நைஜீரியாவின் வட மேற்குப் பகுதியில் ஜம்பாரா மாகாணத்தில் ஜங்கேபே என்ற...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் மாற்றம் ?

பிக் பாஸ் சீசன் 4ன் முடிவை தொடர்ந்து வரும் ஜூன் மாதம் பிக் பாஸ் சீசன் 5 துவங்கவிருக்கிறது.ஆனால் இதில் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவாரா என்பது தான் கேள்வி. தொடர்ந்து நான்கு...

தா.பாண்டியன் ஐயாவின் குரல் மௌனித்தது ஈழத்தமிழருக்கு பெரும் இழப்பு: சிறீதரன் எம்.பி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தேசியக்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் தனது 88வது வயதில் சுகயீனம் காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.கட்சி பேதமின்றி அனைத்துத் தரப்பினராலும் நேசிக்கப்பட்டவர் தா.பாண்டியன். அவரது மறைவு...

பாடசாலை மாணவிகளை கடத்திச்சென்ற தீவிரவாதிகள் !

நைஜீரியா பெண்கள் தங்கிப் படிக்கும் உயர்தரப் பாடசாலை ஒன்றுக்குள் புகுந்த போகோ ஹராம் தீவிரவாதிகள் அங்கிருந்து 317 மாணவிகளைக் கடத்திச் சென்றுள்ளனர். நைஜீரியாவின் வட மேற்குப் பகுதியில் ஜம்பாரா மாகாணத்தில் ஜங்கேபே என்ற...

இந்திய அணியிலிருந்து விலகினாரா பும்ரா ?

இந்திய அணியிலிருந்து பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிப்படட காரணங்களால் நான்காவது டெஸ்ட் இற்கு முன்னாள் தன்னை விடுவிக்குமாறு பும்ரா பி.சி.சி.ஐ இற்கு...

கமலுடன் அரசியலில் இணைந்த பிரபல நடிகர் !

உலக நாயகன் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.தேர்தல் தேதியும் நேற்றைய தினம் மாலையில் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. மாற்றம் வேண்டும்...